புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜூலை, 2015

ராஜீவ் கொலை - குற்றவாளிகளை தமிழக அரசு விடுதலை செய்ய முடியாதுஉச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை தமிழக அரசு விடுதலை செய்ய  முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
அத்துடன் 25 ஆண்டுகளுக்கு மேல் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளையும் மாநில அரசு விடுவிக்கக் கூடாது என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
இத்தீர்ப்பில்,  ’’சிபிஐ விசாரிக்காத வழக்குகளில் ஆயுள் சிறை பெற்ற கைதிகளை விடுவிப்பது குறித்து மாநில அரசு முடிவு செய்து கொள்ளலாம்’’ என்று உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளை தமிழக அரசு விடுதலை செய்ததை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கருத்துத் தெரிவித்துள்ளது.
ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுவதும் என்று கூறியிருந்தால், மாநில அரசு விடுவிக்க முடியாது என்றும், 25 ஆண்டுகளுக்கு மேல் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளையும் மாநில அரசு விடுவிக்கக் கூடாது என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
கடுங்குற்றம் புரியாமல், ஆயுள் தண்டனை பெற்ற சிறைக் கைதிகளை விடுவிப்பது குறித்தும் மாநில அரசு முடிவு எடுக்கலாம் என்றும், மத்திய அரசின் ஆலோசனையைப் பெறத் தேவையில்லாத வழக்குகளிலும், மாநில அரசே முடிவை எடுக்கலாம் என்றும் கூறியுள்ளது.
ஆயுள் சிறை பெற்ற கைதிகளை மாநில அரசு விடுவிக்க உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்திருந்தது. இந்த தடை, இன்றைய உத்தரவின் மூலம் விலகியுள்ளது. 
ஆனாலும், ராஜீவ் காந்தி காந்தி கொலை வழக்கை சிபிஐ விசாரித்ததாலும், இந்த வழக்கில் மத்திய அரசின் ஆலோசனையைப் பெற வேண்டியது அவசியம் என்பதாலும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ad

ad