புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜூலை, 2015

மஹிந்தவுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது


முன்னாள் ஜனா திபதி மஹிந்த ராஜ பக்ஷவுக்கும் எங்களுக்குமிடையில் எந்த தொடர்பும் கிடை யாது என முன்னாள் பிரதியமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று வேட்புமனுத்தாக்கல் செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற் கண்டவாறு கூறினார்.இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் எங்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷவுக்குமிடையில் எந்த தொடர்பும் கிடையாது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலேயே நாங்கள் போட்டியிடுகின்றோம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வுக்கும் எங்களது கட்சிக்குமிடையிலேயே நாங்கள் உடன்படிக்கை செய்துள்ளோம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்த நாட்டில் 62 இலட்சம் மக்கள் வாக்களித்து நல்லாட்சியை உருவாக்கு வதற்கான ஆணையை வழங்கியுள் ளார்கள்.
அந்த ஆணையை நாம் மதித்து அந்த புதிய நல்லாட்சியான ஊழலற்ற நேர்மையான நல்லாட்சியை உருவாக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அணி திரண்டுள்ளோம்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மீள் அரசியல் வருகைக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் இந்த தேர்தலில் போட்டியிடு கின்றோம். எங்களது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்தவொரு கட்சியும் முன் வைக்காத ஒரு யோசனையுடன் நாங்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றோம்.
இந்த தேர்தலில் நான் மற்றும் முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன், முன்னாள் சுகாதார அமைச்சரும் மாகாண சபை உறுப்பினருமான சுபைர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாஹிர் சாலி, முன்னாள் பிரதி மேயர் ஜோர்ஜ் பிள்ளை உட்பட வேட்பாளர்கள் களமிளங்கியுள்ளோம் என்றார்.

ad

ad