புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜூலை, 2015

பொதுத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் சார்பு இல்லை- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!


எதிர்வரும் பொதுத் தேர்தலில் தாம் எந்தக் கட்சிக்கும் சாராத நிலைப்பாட்டை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்
நாட்டு மக்களுக்கு இன்று மாலை ஆற்றிய விசேட உரையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்பு மனு வழங்குவதில் தமக்கு விருப்பம் இருக்கவில்லை.
எனவே பொதுத் தேர்தலில் அவருக்கு தாம் ஆதரவு வழங்கப் போவதில்லை.
இந்த நிலையில், பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெற்றி பெற்றால் பிரதமர் பதவிக்காக கட்சியில் உள்ள பல சிரேஸ்ட உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்றும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்சவை தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு கொண்டு வர முயற்சிக்கப்பட்டமையை அடுத்தே தாம் நாடாளுமன்றத்தை கலைத்ததாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அதேநேரம் தாம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தை காப்பாற்றியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறு நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டிருக்குமானால், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஒருவர் பிரதமராக நியமிக்கப்பட்டிருப்பார்.
இதற்கிடையில் மத்திய வங்கி முறிக்கொள்வனவு தொடர்பில் குற்றச்சாட்டு எழுந்த பின்னர் மத்திய வங்கி ஆளுநரை பதவி விலகக் கோருமாறு தாம் பிரதமரிடம் கேட்டுக்கொண்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ad

ad