புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூலை, 2015

மஹிந்த குடும்ப ஆட்சியின்; ஊழல், மோசடி விசாரணைகள் நிறுத்தப்பட மாட்டாது


மஹிந்த ராஜபக்ஷ குடும்ப ஆட்சியில் நடைபெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணைகள் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படாது இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் குறிப்பிடப் பட்டுள்ளதாவது, அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு க்கள் அனைத்துக்கும் சரியான முறையில் விசாரணைகள் நடத்தப்படுகின் றன. மஹிந்த ராஜபக்ஷ
ஆட்சிக்காலத்திலே பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநா யக்கவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது போன்று அல்லது பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகாவுக்கு தண்டனை வழங்கப்பட்டதைப் போன்று செயற்பட முடியாது.
அன்று சட்டம் காட்டு தர்பார் போன்றே பின்பற்றப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினரும் தொடர்புபட்டிருக்கும் பாரிய அளவிலான மோசடிகள், ஊழல்கள் தொடர்பாக தகவல்கள் தினந்தினம் வெளிவந்தவண்ணமே இருக்கின்றன.
தரகுக் கூலி பெறுதல், பங்குச் சந்தை ஊடாக செய்யப்பட்ட பாரிய மோசடிகள், போலி அடையாள அட்டைகளை சமர்ப்பித்து ஆரம்பிக்கப்பட்ட வங்கிக் கணங்குகள், அரச சொத்துக்களை கையாடல், அரச காணிகளை மிகக்குறைந்த விலையில் விற்பனை செய்தல், கொழும்பு நகரில் மிகப் பெறுமதி வாய்ந்த காணிகளைத் தமது நெருங்கிய சகாக்களுக்கு, வர்த்தகர்களுக்கு வழங்கியமை போன்று குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மாளிகைக் கட்டடத்தினுள் 2.5 பில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்ட நீச்சல்தடாக கட்டட ஊழல் சீன நிறுவனத்தின் ஊடாகப் பெறப்பட்ட 1.8 பில்லியன் ரூபா தரகுப்பணம், 15 பில்லியன் ரூபா நுரைச்சோலை நிர்மாணிப்புக்கான தரகுப் பணம், அதிவேகநெடுஞ்சாலை நிர்மாணிப்பில் பெறப்பட்ட 1.8 பில்லியன் ரூபா தரகுப்பணம், சமுர்த்தி நிதியிலிருந்து வெட்டப்பட்ட 6.5 பில்லியன் ரூபா பணம், லங்கா புத்திர வங்கியில் தனது நண்பர்களுக்குப் பெற்றுக்கொடுத்த 1.6 பில்லியன் ரூபா உட்பட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாட்டுக்கு இழைத்த பாரிய ஊழல் மோசடிகளை மறைப்பதற்காகவே எந்தக் குற்றச்செயல்களும் செய்யாத தூய்மையானவர் என்பதைப் போன்று மஹிந்த ராஜபக்ஷ பேசிவருகிறார். ஜனாதிபதி என்ற உயரிய பதவியிலிருந்து சாதாரண எம்பி பதவிவரை கீழிறங்கி வருவதற்கு அவர் முயற்சிப்பது தன்னையும் தனது சகாக்களையும் இவற்றிலிருந்து காப்பாற்றுவதற்கே. நாட்டுக்கு ஏற்படுத்தியிருக்கின்ற பாரிய மோசடிகளிலிருந்து விடுபடுவதற்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவர் பேச்சினா லேயோ அல்லது ஊடக அறிக்கைகளினா லேயோ ஒருபோதும் இடமளிக்கப்படாது.
சட்டிக்குள் இருக்கும் தண்ணீர் கொதிக்கும் வரையும் அதற்குள் நீந்தித் திரியும் நண்டாக இன்று அவரும் அவரது சகாக்களும் துடித்துக்கொண்டிருக் கிறார்கள். தோல்வியின் ஊடாக அவர்களின் செயல்களுக்கு சரியான தண்டனை கிடைக்கும் என்பதை அவர்கள் உணர்ந் துள்ளார்கள்.

ad

ad