புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜூலை, 2015

மகிந்தவுக்கு வேட்புமனு என் அனுமதி இல்லாமல் வழங்கப்பட்டது: ஜனாதிபதி



எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது பக்கச்சார்பின்றிச் செயற்படப்போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

 
அத்துடன்,ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிடவுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு, தான் ஆதரவளிக்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
 
தன்னுடைய அனுமதி இல்லாமலேயே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புமனு வழங்கப்பட்டதாகவும்,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிரதமர் வேட்பாளருக்கு பொருத்தமான வேறு பல சிரேஷ்ட தலைவர்கள் இருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
 
ஜனாதிபதி நேற்று மாலை நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அவர்  மேலும் தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை ஏற்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் சரியானதாகும். எனக்குப் பதிலாக மஹிந்த ராஜபபக்ஷ கட்சியின் தலைவராக இருந்திருந்தால் நல்லாட்சி அரசின் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு அவர் ஒத்துழைப்பு வழங்கியிருக்க மாட்டார். அதனால் நாட்டு மக்களுக்கும் நன்மை கிடைத்திருக்காது.
 
கடந்த வாரங்களில் என்னைப் போன்று தாக்குதல்களை சமாளித்த ஜனாதிபதி ஒருவர் இதற்கு முன்னர் இருந்திருக்கவே மாட்டார் என நினைக்கின்றேன். துரோகி, காட்டிக் கொடுத்தவர் என்று என்னை பலர் விமர்சித்தார்கள்.
 
அவ்வாறு ஜனாதிபதி ஒருவரை விமர்சிப்பதற்கான ஊடக சுதந்திரம் இன்று ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜனவரி 8ஆம் திகதிக்கு முன்னர் இவ்வாறு விமர்சித்திருந்தால் விமர்சிப்போருக்கு என்ன நடந்திருக்கும் என்பதை அறிவோம்.என் அனுமதி இல்லாமல் மஹிந்தவுக்கு வேட்புமனு வழங்கப்பட்டது: அவர் இந்த விடயத்தை கூறினார்.
 
அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை ஏற்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் சரியானதாகும். எனக்குப் பதிலாக மஹிந்த ராஜபபக்ஷ கட்சியின் தலைவராக இருந்திருந்தால் நல்லாட்சி அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு அவர் ஒத்துழைப்பு வழங்கியிருக்க மாட்டார். அதனால் நாட்டு மக்களுக்கும் நன்மை கிடைத்திருக்காது.
 
கடந்த வாரங்களில் என்னைப் போன்று தாக்குதல்களை சமாளித்த ஜனாதிபதி ஒருவர் இதற்கு முன்னர் இருந்திருக்கவே மாட்டார் என நினைக்கின்றேன். துரோகி, காட்டிக் கொடுத்தவர் என்று என்னை பலர் விமர்சித்தார்கள்.
 
அவ்வாறு ஜனாதிபதி ஒருவரை விமர்சிப்பதற்கான ஊடக சுதந்திரம் இன்று ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜனவரி 8ஆம் திகதிக்கு முன்னர் இவ்வாறு விமர்சித்திருந்தால் விமர்சிப்போருக்கு என்ன நடந்திருக்கும் என்பதை அறிவோம்.
 
அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபபக்ஷவுக்கு வேட்புமனு வழங்கியதை நானும் எதிர்க்கின்றேன். கடந்த ஜனவரி 8ஆம் திகதி படுதோல்வியடைந்த மஹிந்த ராஜபபக்ஷ அடுத்த பொதுத் தேர்தலிலும் படுதோல்வியடைவது உறுதி’ என்றும் அவர் தெரிவித்தார்.

ad

ad