புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூலை, 2015

கசிப்பு வைத்திருந்த பெண்ணுக்கு கிளிநொச்சி மன்று வழங்கிய தீர்ப்பு சரியானது-நீதிபதி ம.இளஞ்செழியன்


கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தினால் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த சந்தேக நபருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் மீளாய்வு விண்ணப்ப மனுவை யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி ம.இளஞ்செழியன் அத்தீர்ப்பு சரியானதெனகூறி மீளாய்வு மனுவை தள்ளுபடி வெய்தார்.
 
கிளிநொச்சி பகுதியில் கடந்த மே மாதம் 14ஆம் திகதி 3ஆயிரத்து 750 மில்லிவீற்றர் சட்ட விரோத மதுபானம், அதனை உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தபடும் 18 ஆயிரத்து 750மில்லிலீற்றர் கோடா ஆகிவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆயர்படுத்தப்பட்டார்.
 
இதன் வழக்கு தவணை கடந்த யூன் மாதம் 3ஆம் திகதி மன்றில் எடுத்துகொள்ளப்பட்ட போது சந்தேக நபருக்கு இரண்டு குற்றங்களுக்காக தலா ஒரு இலட்சத்து 25ஆயிரம் ரூபா அபராதம் விதித்தும்  ஒரு வருட சாதாரண சிறை தண்டனை விதித்தும் நீதவான் ஜனாப் வஹாப்தீன் தீர்ப்பளித்தார்.
 
தீர்ப்பின் மீளாய்வு விண்ணப்ப மனு யாழ் மேல் நீதிமன்றில் கோரப்பட்டது. இதன் விசாரணை நேற்று மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதபதி அம்மனுவை தள்ளுபடி செய்திருந்தார்.
 
சட்டவிரோத செயல்களை தடுக்க, சமூக சீரகேட்டை தடுப்பதற்கும் அதிகபட்ச தண்டனை வழங்க இனி வரும் காலத்தில் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடுபவர்களுக்கு இத்தீர்ப்பு எச்சரிக்கையாக அமையவேண்டும் என்ற நோக்குடன் கிளிநொச்சி நீதவான் வழங்கிய தீர்பினை மேல் நீதிமன்றம் கருதுகின்றது. 
 
இதில் சட்டரீதியான பிழை எதுவும் இல்லை சட்டவரம்புக்கு உட்பட்டு குற்றவாளி குற்றத்தை ஒப்புகொண்டார் என்ற ரீதியில் சட்ட வரம்பு எல்லையில் இது வழங்கப்பட்டுள்ளது.
 

ad

ad