புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜூலை, 2015

அப்துல்கலாமின் இறுதி சடங்கு ராமேசுவரத்தில் நடைபெறும் மத்திய அரசு வட்டார தகவல்கள்

அப்துல்கலாம் மறைவை தொடர்ந்து அவரது சொந்த ஊரான ராமேசுவரம் சோகத்தில் மூழ்கியது.


இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்களை கனவு காணுங்கள் என தட்டி எழுப்பியவர் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம். ஏவுகனை நாயகன் என உலகம் முழுவதும் «பசப்பட்ட இவர், எளிமையின் உருவமாக திகழ்ந்தார்.

இந்தியாவை பல வழி களிலும் முன்னுக்கு கொண்டு சென்ற அப்துல் கலாமின் சொந்த ஊர், ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ஆகும். இங்கு தற்போது அவரது அண்ணன் முத்து முகமது மீரான் லெப்பை மரைக்காயர் (வயது98) மற்றும் உறவினர்கள் வசித்து வருகின்றனர்.

அப்துல் கலாமின் திடீர் மறைவு அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தியது. இந்த செய்தியை கேட்டதும் அப்துல் கலாமின் அண்ணன் முத்து முகமது மீரான் லெப்பை மரைக்காயர் மயங்கி கீழே விழுந்தார். அவரை உறவினர்கள் தண்ணீர் தெளித்து சகஜ நிலைக்கு கொண்டு வந்தபோதும் பேபச முடியாமல் அப்படியே சோகமாக அமர்ந்து விட்டார்.

கலாமின் மரணம் குறித்த தகவல் கிடைத்ததும் ராமேசுவரம் மட்டுமின்றி ராமநாதபுரம் மாவட்டமே சோகத்தில் மூழ்கியது. ஏராளமானோர் இரவே அவரது வீடு மற்றும் அங்கு அமைந்துள்ள அருங் காட்சியம் முன்பு குவிந்த னர். அவர்கள் கலாமின் சகோதரரை சந்தித்து ஆறுதல் கூறினர்.

அப்துல்கலாம் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும் என அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று காலை அப் துல்கலாம் உடல் மூவர்ண தேசியக் கொடி போர்த்தப் பட்ட பெட்டிக்குள் வைக்கப் பட்டது. பிறகு   ராணுவ ஹெலிகாப்டர் மூலம் அவர் உடல் ஷில்லாங்கில் இருந்து அசாம் தலைநகர் கவுகாத்திக்கு எடுத்து வரப் பட்டது.கவுகாத்தியில் அசாம் முதல்-மந்திரி தருண் கோயோய், முன்னாள் முதல்- மந்திரி பிரபுல்லகுமார் மகந்தா, தலைமை செயலாளர் பிபர்செனியா, டி.ஜி.பி. ககன் சர்மா உள்பட பலர் மலர் அஞ்சலி செலுத்தினார்கள். முப்படைகளின் ராணுவ உயர் அதிகாரிகளும் அப்துல் கலாம் உடல் மீது மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

கவுகாத்தியில் சுமார் 1.30  மணி நேரம் அவர் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட் டிருந்தது. அதன் பிறகு சிறப்பு விமானத்தில் அவர் உடல் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது.
அந்த சிறப்பு விமானம் இன்று மதியம் டெல்லி பாலம் விமான நிலையத்தில் தரை இறங்கியது. விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரிகள் மற்றும் மத்திய அரசின் உயர் அதிகாரிகள் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

விமான நிலையத்தில் இருந்து டெல்லி ராஜாஜி பார்க்கில் உள்ள அவரது அரசு வீட்டுக்கு உடல் எடுத்துச்  செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக அப்துல்கலாம் உடல் வைக்கப்பட்டது. மக்கள் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.அப்துல்கலாம் மறைவை முன்னிட்டு மத்திய அரசு 7 நாள் துக்கத்தை அறிவித்துள்ளது.

இன்று பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அப்துல்கலாம் மறைவுக்கு இரங்கல் செய்தி வாசிக்கபட்டது. பின்னல் இரு அவைகலும் ஒத்தி வைக்கபட்டது.

அப்துல்கலாம் இறுதி சடங்குகளை அவர் பிறந்த ஊரான ராமேசுவரத்தில் நடத்த அவரது உறவினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதுபற்றி மத்திய மந்திரி சபை கூட்டத்தில் ஆலோசிக் கப்பட்டது. தற்போது ராமேசுவரத்தில் அவரது இறுதி சடங்கு நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. நடை நாளை (புதன்கிழமை) அப்துல்கலாம் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. முழு ராணுவ அரசு மரியாதையுடன் அவர் உடல் அடக்கம் செய்யப்படும்

ad

ad