புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூலை, 2015

அதிபர்கள் இடமாற்றம் ரத்து

வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிபர்களின் இடமாற்றத்தை உடனடியாக ரத்துச் செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, வடமாகாண கல்வி அமைச்சின்
செயலாளாருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
 
அண்மையில் வடமாகாண கல்வி அமைச்சினால் சில பாடசாலைகளின் அதிபர்களுக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது. இது பல்வேறு மட்டங்களில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த நிலையில், சில பாடசாலைகளின் அதிபர்கள் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக பல்வேறு மட்டங்களின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
 
அந்த வகையில் இந்த விடயம் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது. இதனையடுத்து, தேர்தல்கள் ஆணையாளரினால் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டதுடன், அதில் அதிபர்களின் இடமாற்றத்தை ரத்துச் செய்யுமாறும் உத்தரவிட்டிருந்தார்.
 
 தேர்தல் தொடர்பான அறிவிப்பு விடுக்கப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட அதிபர்களின் இடமாற்றம், தேர்தல் சட்டவிதிகளுக்கு முரணானது எனவும் எனவே, இக்காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அதிபர்கள் இடமாற்றம் தொடர்பில் தனக்கு விளக்களிக்குமாறும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரை, தேர்தல்கள் ஆணையாளர் கோரியுள்ளார்.
 
அதுவரையில் அதிபர்கள் இடமாற்றத்தை ரத்து செய்யுமாறும் தேர்தல்கள் ஆணையாளர் அந்த கடிதத்தின் மூலம் உத்தரவிட்டுள்ளார். 

ad

ad