புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜூலை, 2015

வாகனங்கள் தொடர் சோதனை; மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை


யாழ்ப்பாணம் மோட்டார் வாகன திணைக்களத்தினரும் பொலிஸாரும் இணைந்து இரவு வேளையிலும் சேவையில் ஈடுபடுவதற்கு தகுதியற்ற வாகனங்களை சோதனை செய்யும் நடவடிக்கையினை  மேற்கொண்டு வருவதாக யாழ். மாவட்ட பிரதான மோட்டார் வாகன பரிசோதகர் மதிவண்ணன் தெரிவித்தார். 
 
அவர் மேலும் தெரிவிக்கையில், 
 
சேவையில் ஈடுபடுவதற்கு தகுதியற்ற வாகனங்களே அதிகளவில் சேவையில் ஈடுபடுகின்றன. அவற்றை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸாருடன்  இணைந்து நடவடிக்கையினை எடுத்துள்ளோம். 
 
அந்தவகையில் கடந்த சில மாதங்களாக யாழ்ப்பாணம் ,  வடமராட்சி மற்றும்  தென்மராட்சி  ஆகிய பகுதிகளில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் சுமார் 200 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
 
இவ்வாறு வாகனங்களை சேவையில் ஈடுபடுத்துபவர்கள் வாகனங்களின்  தரத்தை குறிப்பிட்ட காலத்திற்கு காலம் உறுதி செய்ய வேண்டும். பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில்  இருக்கும் பாகங்களை மாற்றி தரமான சேவையினை வழங்க வேண்டும் என்றும்  நாம் வாகன உரிமையாளர்களிடம்  கேட்டுக் கொள்கின்றோம். 
 
அத்துடன்  முச்சக்கரவண்டி உள்ளிட்ட வாகனங்களில் அதிக சேடினைப் பொருட்களை தேவைக்கு அதிகமாக பொருத்துதல் மற்றும்  கண்ணாடிகளை மறைத்து ஸ்ரிக்கர்களை ஒட்டுதல் போன்ற தேவையற்றவற்றை நீக்கிவிட வேண்டும். 
 
அவ்வாறு இல்லாத பட்சத்தில் திடீர் சோதனையின் போது இவ்வாறான செயற்பாடுகள் கண்டறியப்பட்டால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.தற்போது முச்சக்கர வண்டிகள் மட்டுமல்ல சிற்றூர்திகள்  மற்றும்  ஏனைய வாகனங்களும் சோதனை செய்யப்படுகின்றது. தொடர்ந்தும்  அனைத்துப் பகுதிகளிலும் சோதனை நடவடிக்கை தொடரும். 
 
மேலும்  சேவையில் ஈடுபடுவதற்கு தகுதியற்ற வாகனங்கள் தொடர்பில் பொதுமக்கள் முறைப்பாடு செய்வதற்கு அவசர இலக்கம் ஒன்றும் விரைவில் அறிமுகம் செய்யப்படுகின்றது என்றும்  அவர் மேலும்  தெரிவித்தார்.  

ad

ad