புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூலை, 2015

கிரீஸ் நாட்டு வாக்கெடுப்பு எதிரொலி: யூரோவை பின்னுக்கு தள்ளிய சுவிஸ் பிராங்க்


கிரீஸ் நாட்டின் கடன் சுமை காரணமாக நேற்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பெரும்பாலான மக்கள் சர்வதேச நாணய நிதியகத்தின் நிபந்தனைகளை ஏற்க வேண்டாம் என கூறியுள்ளதால் பிராங்க் மற்றும் டொலருக்கு எதிரான யூரோவின் மதிப்பு திடீரென குறைந்துள்ளது.
சர்வதேச செலவாணி நிதியகம் மற்றும் ஐரோப்பிய நாடுகள் விதித்த நிபந்தனைகளை ஏற்கலாமா வேண்டாமா என கிரீஸ் அரசு நடத்திய வாக்கெடுப்பில் சுமார் 61.3 சதவிகித மக்கள் நிபந்தனை ஏற்க வேண்டாம் என வாக்களித்துள்ளனர்.
பொது மக்களின் இந்த வாக்கெடுப்பின் விளைவாக, தற்போது கிரீஸ் நாடு ஐரோப்பிய கூட்டணி நாடுகளின் பட்டியலில் இருந்து வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்கெடுப்பின் முடிவுகள் வெளியான சில மணி நேரங்களிலேயே யூரோவை மையப்படுத்தி நடந்துவரும் பங்குச்சந்தைகள் மோசமான வீழ்ச்சியை கண்டதுடன் யூரோவின் நாணய மதிப்பும் குறைந்துள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகராக ஒரு யூரோவின் மதிப்பு 1.111 டொலராக இருந்தது, தற்போது 1.099 டொலராக குறைந்துள்ளது.
அதேபோல், சுவிஸ் பிராங்கிற்கு நிகராக ஒரு யூரோவின் மதிப்பு 1.045 பிராங்காக இருந்தது, தற்போது 1.036 பிராங்காக குறைந்துள்ளது.
தற்போது, கிரீஸ் நாட்டு நிதி அமைச்சர், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அந்நாட்டில் நிலவி வரும் பொருளாதார சரிவின் காரணமாக யூரோவின் மதிப்பு மேலும் பலவீனமடைய வாய்ப்புள்ளதாகவும் வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

ad

ad