புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜூலை, 2015

தமிழக அரசு இளைஞர்களின் குரலை கேட்பதில்லை: கொட்டும் மழையில் பேசிய ராகுல் காந்தி


திருச்சியில் காமராஜர் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் உரையாற்றியுள்ளார்.

திருச்சியில் கொட்டும் மழையில் மேடையேறிய ராகுல்காந்தி, தமிழில் 'வணக்கம்' எனக் கூறி உரையை தொடங்கியுள்ளார்.
பிறகு ஆங்கிலத்தில் உரையைத் தொடர்ந்த அவர், 'தமிழக மக்களிடம் உரையாற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது.
காமராஜரால் முதல் முறையாக பள்ளிக்கு செல்லும் வாய்ப்பு பலருக்கு கிடைத்தது.
ஏராளமானோர் நல்ல வேலை வாய்ப்பு கிடைத்து, சிறப்பாக வாழ வழிவகுத்தவர் காமராஜர்.
எனது குருநாதர் காமராஜர் எல்லோருக்கும் குரல் கொடுத்தார். எல்லோருடைய குரலையும் மதித்தார்.
இன்று ஆட்சியில் இருப்பவர்கள் மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிப்பதில்லை.
பிரதமராக, முதல்வராக மக்கள் விருப்பம் அறியாது ஆட்சி நடத்த முடியும் என நினைக்கிறார்கள்.
தமிழகத்தில் மிக முக்கியமான பிரச்னையாக வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளது. இங்கு மூன்றில் ஒருவருக்கு வேலையில்லை.
அதே போல், தமிழக அரசு இளைஞர்களின் குரலை கேட்பதில்லை என பேசியுள்ளார்.

ad

ad