புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜூலை, 2015

கே.பி இதுவரையில் இலங்கையில் உள்ளாரா அல்லது வெளிநாட்டில் உள்ளாரா-நீதி பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க


விடுதலை புலிகள் அமைப்பின் முக்கியஸ்தரான கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் தொடர்பில் ஆராயவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
விடுதலை புலிகள் அமைப்பின் முக்கியஸ்தரான கே.பி தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கை தொடர்பில் ஜனாதிபதி தேர்தலின் போது ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்கள் பல்வேறு கருத்து வெளியிட்டனர்.
எனினும் தேர்தலின் பின்னர் இது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என நீதி பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்கவிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
கண்டி மல்வத்து தேரை சந்தித்ததனை தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் சந்தர்ப்பத்திலே அவரிடம் இவ்வாறு கேள்வியெழுப்பபட்டது.
இக்கேள்வியெழுப்பிய சந்தர்ப்பத்தில் தன் தொலைப்பேசியின் ஊடாக சட்டத்தரனிக்கு அழைப்பேற்படுத்திய பிரதி அமைச்சர் கே.பிக்கு என்ன நடந்ததென வினவியுள்ளார்.
கே.பி தொடர்பில் என்ன செய்யலாம் என்பது தொடர்பில் பரிந்துரை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு நிறுவப்பட்டுள்ளதாகவும், குறித்த பரிந்துரைகள் இதுவரையில் தன்னிடம் கிடைக்கவில்லை என சட்டதரணி குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தான் கே.பிக்கு என்ன நடந்ததென்பது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கே.பி இதுவரையில் இலங்கையில் உள்ளாரா அல்லது வெளிநாட்டில் என்பதனை உறுதி செய்வதற்காக பிரதி அமைச்சர் மேற்கொண்ட முயற்சிகளும் வெற்றியளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

ad

ad