புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூலை, 2015

பிளாட்டர் மீது ‘டாலர்’ வீச்சு

sepp blatter Prankster showers  fake dollar bills at Fifa press conference
 
இங்கிலாந்தின் காமெடி நடிகர் சைமன் புராட்கின், ‘பிபா’ தலைவர் செப் பிளாட்டர் மீது பணத்தை (‘டாலர்’) எறிந்து பரபரப்பு ஏற்படுத்தினார்.
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (‘பிபா’) தலைவர் செப் பிளாட்டர், 79. தொடர்ந்து ஐந்தாவது முறையாக தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 
‘பிபா’ நிர்வாகிகள் செய்த ஊழல் தொடர்பாக 7 பேர் கைதுக்கு பின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். 

சுவிட்சர்லாந்தின் ஜூரிச்சில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் நேற்று பிளாட்டர் பங்கேற்றார். அங்கு போலியான ‘டாலர்களுடன்’(பணம்) வந்தார் இங்கிலாந்து காமெடி நடிகர் சைமன் புராட்கின். 
பின் மேடையில் இருந்த பிளாட்டரைப் பார்த்து,‘ 2026ல் வடகொரியாவில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடத்த அனுமதி தருவதற்கு இந்த பணத்தை லஞ்சமாக வைத்துக் கொள்ளுங்கள்,’ என்று கூறி, கையில் இருந்த ‘டாலர்களை’ அப்படியே பிளாட்டர் மீது வீசினார்.
பின் அங்கு வந்த போலீசார் சைமனை அங்கிருந்து அகற்ற, 10 நிமிட தாமதத்துக்குப் பின் கூட்டம் தொடர்ந்து நடந்தது.

ad

ad