புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூலை, 2015

மத்திய மந்திரி சுஷ்மாசுவராஜின் டுவிட்டர் பக்கத்தில் அவரது பதவி திடீரென அகற்றப்பட்டு உள்ளது. ராஜினாமா செய்தாரா?


மத்திய மந்திரி சுஷ்மாசுவராஜின் டுவிட்டர் பக்கத்தில் அவரது பதவி திடீரென அகற்றப்பட்டு உள்ளது. எனவே அவர் ராஜினாமா செய்தாரா? என அரசியல் வட்டாரத்தில்
பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

நிதி மோசடி வழக்கில் அமலாக்கப்பிரிவினரால் தேடப்படும் ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித்மோடிக்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே ஆகியோர் உதவிய விவகாரம் மத்திய அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
இருவரையும் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் பாரதீய ஜனதா ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடம் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. இதனையடுத்து பாராளுமன்றத்தில்  காங்கிரஸ் எம்.பி.க்கள் தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டனர். மேல்சபையிலும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் கூச்சல் குழப்பம் நிலவியது.

இந்த நிலையில் மத்திய மந்திரியின் சுஷ்மா சுவராஜின் டுவிட்டர் சமூக வலைதளத்தில் அவரது பெயருக்கு கீழ் இருந்த வெளியுறவுத்துறை மந்திரி, இந்திய அரசு என்ற வார்த்தை கடந்த ஒரு வாரமாகவே திடீரென அகற்றப்பட்டு உள்ளது. அவரது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் சுஷ்மாசுவராஜின் பெயர் மட்டுமே இடம்பெற்று உள்ளது. வெளியுறவுத்துறை மந்திரி என்ற பதவி நீக்கப்பட்டு உள்ளது.

இதனால் சுஷ்மாசுவராஜ் ராஜினாமா செய்ய உள்ளதால் அவரது பதவி டுவிட்டர் பக்கத்தில் இருந்து அகற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதனை அவரது நெருங்கி வட்டாரங்கள் மறுத்து உள்ளன.

ad

ad