புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூலை, 2015

பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மறுசீராய்வு மனு தாக்கல்

வழக்கில் 7 பேரின் விடுதலையை முடிவு செய்யும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. 

முன்னதாக நேற்றைய விசாரணையின்போது தமிழக அரசின் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வமான வாதத்தில், வழக்கை சிபிஐ விசாரித்ததால் மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்பதை ஏற்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் இன்றைய விசாரணையின்போது, பேரறிவாளன், சாந்தன், முருகன் மீதான தண்டனை குறைப்பை எதிர்த்து மத்திய அரசு மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்தது. 20 ஆண்டு சிறைத் தண்டனையை மட்டும் காரணம் காட்டி தண்டனை குறைக்கப்படுவதை ஏற்க முடியாது என்று அந்த மனுவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

தண்டனை குறைப்புக்கு எதிரான மத்திய அரசின் சீராய்வு மனு தள்ளுபடியானதால் மறுசீராய்வு மனுவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. 

ad

ad