புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூலை, 2015

ரஷ்யாவில் நவாஸ் ஷெரிப்பை சந்தித்தார் மோடி



ரஷ்யாவின் உபா நகரில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை இன்று சந்தித்தார்.  

உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், துர்க்மெனிஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய 5 மத்திய ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி தற்போது ரஷ்யா சென்றுள்ளார். ரஷ்யாவின் உபா நகரத்தில் உள்ள விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. உபா நகரில் நேற்று நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் அவர் கலந்து கொண்டார்.

இன்று காலை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை நரேந்திர மோடி, சந்தித்தார். இருநாடுகளை சேர்ந்த உயரதிகாரிகள் முன்னிலையில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற்று வருகிறது. மும்பை தாக்குதல் தீவிரவாதி லக்வியை பாகிஸ்தான் விடுதலை செய்தது, எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவல், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல் உள்பட இருநாடுகளுக்கு இடையிலான பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து நவாஸ் ஷெரிப்புடன் பிரதமர் மோடி விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அதிகாரிகள் தரப்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்று வருகின்றனர்.

முன்னதாக, வெளிநாடுகளை சேர்ந்த தலைவர்களுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்றிரவு அளித்த விருந்தில் பங்கேற்ற பிரதமர் மோடியும், நவாஸ் ஷெரிப்பும் நேருக்கு நேர் சந்தித்து, சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad