புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஆக., 2015

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளுக்கமைய ஐ.தே.க 10 மாவட்டங்களில் வெற்றியீட்டும்


உத்தியோகபூர்வமற்ற முடிவுகளுக்கமைய 10 மாவட்டங்களில் ஐக்கிய தேசிய கட்சியும், 9 மாட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் வெற்றி பெற முடியும் என தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய கொழும்பு கண்டி, நுவரெலியா, பதுளை, புத்தளம், பொலனறுவை, திகாமடுல்லை, மாத்தளை, திருகோணமலை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் முன்னிலையில் இருப்பது ஐக்கிய தேசிய கட்சியாகும்.
காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, களுத்துரை, மொனராகலை, இரத்தினபுரி, அனுராதபுரம், கம்பஹா, குருநாகல் ஆகிய மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முன்னிலையில் உள்ளன.
யாழப்பாணம், வன்னி மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னிலையில் உள்ளது.
அதற்கமைய ஐக்கிய தேசிய கட்சி ஒட்டுமொத்தமாக 102 ஆசனங்களையும், முன்னணி ஒட்டுமொத்தமாக 100 ஆசனங்களையும் பெற்று கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ad

ad