புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஆக., 2015

ஜிம்பாப்வே அணிக்கு பதிலடி கொடுத்தது நியூசிலாந்து: 10 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி


ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது ஜி
ம்பாப்வே.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி ஹராரேவில் நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் தட்டுத்தடுமாறி விளையாடிய ஜிம்பாப்வே அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 235 ஓட்டங்கள் எடுத்தது.
தொடக்க வீரர் சிபாபா (42), 7வது வீரராக களம் வந்த கிகந்தர் ரஸா (100) சிறப்பாக விளையாடினர்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக குப்டில், லாதம் களமிறங்கினர்.
தூண் போல் நின்ற இந்த ஜோடியை பிரிக்க ஜிம்பாப்வே அணி கடினமாக முயற்சித்தும் பலனளிக்காமல் போனது.
இதனால் 42.2 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 236 ஓட்டங்கள் எடுத்து 10 விக்கெட்டுகளால் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.
குப்டில் (116), லாதம் (110) இருவரும் சதம் விளாசினர். இருவருமே ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டனர்.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

ad

ad