புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஆக., 2015

இந்தியா 2வது இன்னிங்சில் 325 ஓட்டங்களுக்கு டிக்ளேர்: இலங்கைக்கு 413 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

கொழும்பில் நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 413 ஓட்டங்களை இலங்கைக்கு வெற்றி இலக்காக கொடுத்துள்ளது.

இந்தியா- இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் போட்டி கொழும்பு பி.சாரா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி, துடுப்பெடுத்தாட முடிவு செய்தார். அதன் படி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 393 ஓட்டங்கள் எடுத்தது.
ராகுல் (108) சதம் அடித்தார். அணித்தலைவர் விராட் கோஹ்லி (78), ரோஹித் (79), சஹா (56) ஆகியோர் அரைசதம் எடுத்தனர். இலங்கை தரப்பில், ஹேராத் 4, பிரசாத், மேத்யூஸ், சமீரா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி 2ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 140 ஓட்டங்கள் எடுத்திருந்தது. மெத்யூஸ் 19 ஓட்டங்களுடனும், திரிமன்னே 28 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
3வது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து விளையாடிய திரிமன்னே, அணித்தலைவர் மேத்யூஸ் பொறுப்பாக விளையாடி ஓட்டங்கள் சேர்த்தனர்.
இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 127 ஓட்டங்கள் குவித்தது. நிதானமாக விளையாடி வந்த நிலையில் திரிமன்னே 62 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய மேத்யூஸ் (102) சதம் அடித்தார். அடுத்து களமிறங்கிய சந்திமால் (11), பிரசாத் (5) வரிசையாக ஆட்டமிழந்தனர். முபாரக் (22) ஓரளவு நிலைத்து நின்ற ஆடிய போதிலும், ஹேராத் (1), கவுஷால் (6) அடுத்தடுத்து வெளியேறினர்.
இதனால் இலங்கை அணி 306 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. சமீரா (0) களத்தில் இருந்தார். இந்தியா தரப்பில், மிஸ்ரா 4, இஷாந்த், அஸ்வின் தலா 2, யாதவ், பின்னி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ராகுல் (2) பிரசாத்தின் அபார பந்தில் பவுல்ட் ஆனார்.
3வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 29.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 70 ஓட்டங்கள் எடுத்திருந்தது. ரஹானே (28), முரளிவிஜய் (39) களத்தில் இருந்தனர்.
இன்று 4வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய முரளிவிஜய் (82) சதத்தை தவறவிட்டார்.
விராட் கோஹ்லி (10) நிலைக்கவில்லை. மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து ரஹானே (126) சதம் அடித்தார்.
ரோஹித் சர்மா (34) ஓரளவு சிறப்பான ஓட்டங்கள் குவித்து ஆறுதல் அளித்தார். 
பின்னி (17), அஸ்வின் (19), மிஸ்ரா (10) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இந்திய அணி 8 விக்கெட்டுக்கு 325 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
அப்போது இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி டிக்ளேர் செய்து கொள்வதாக அறிவித்தார்.
இதனால் இலங்கை அணிக்கு 413 ஓட்டங்கள் இலக்காக கொடுக்கப்பட்டது. இலங்கை சார்பில், பிரசாத், கவுஷால் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.
தற்போது இலங்கை அணி தனது 2வது இன்னிங்சை விளையாடி வருகிறது

ad

ad