புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஆக., 2015

தமிழ்நாடு முழுவதும் 2000 மதுக்கடைகள் வரை மூடப்படும் கிராமங்களில் இனி கிடையாது தமிழக அரசு முடிவு


தமிழகத்தில் மதுக்கடை களை எதிர்த்தும், மது விலக்கை அமல்படுத்தக் கோரியும் அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன
. இது தொடர்பான «பாராட்டங்களும் தீவிரம் அடைந்துள்ளது. இதையடுத்து முதல் கட்டமாக மதுக்கடை களின் எண்ணிக்கை யையும், மதுக்கடைகள் திறந்து இருக் கும் நேரத்தையும் குறைப்பது பற்றி தமிழக அரசு ஆலோ சனை நடத்தி வருகிறது.

இது தொடர்பாக டாஸ்மாக் மேலாண் இயக்குனர் சி.என்.மகேஸ்வரன் தலைமையில் உயர் அதிகாரிகள் கூட்டம் நடந்தது. இதில் மதுக்கடை களின் எண்ணிக்கையை குறைப்பது, இதனால் ஏற் படும் வருமான இழப்பு போன்றவை பற்றி ஆலோசிக் கப்பட்டது. இது தொடர்பாக கணக் கெடுப்பு நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து மதுக்கடை களின் எண்ணிக்கையை குறைப்பது குறித்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட் டது.

அதில் அதில் கோவில்கள், வழிபாட்டு தலங்கள், பள்ளிக் கூடங்கள், மார்க்கெட்டு கள், பஸ் நிலையங்கள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் மற்றும் கிராமங்கள் உள்ளிட்ட 9 இடங்களில் எத்தனை மதுக் கடைகள் உள்ளன? தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை களில் உள்ள மதுக்கடைகளின் எண்ணிக்கை என்ன? அவற்றை வேறு இடத்துக்கு மாற்றம் செய்வது அல்லது மூடுவது குறித்தும், பொது மக்கள் எதிர்ப்பு குறித்தும் தகவல் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 அதன்படி மாவட்ட வாரியாக அதிகாரிகள் கணக் கெடுப்பு நடத்தி சென்னை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் டாஸ்மாக் உயர் அதிகாரிகள் மண்டல மேலாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்கள். இன்றும் தொடர்ந்து ஆலோ சனை நடைபெற்று வரு கிறது.

இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் 1,500 முதல் 2,000 மதுக்கடைகள் வரை மூடப்படும் என்று தெரிகிறது. மேலும் நாள் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம், ரூ.75 ஆயிரம் ஆகியவற்றுக்கு குறைவாக விற்பனையாகும் மதுக்கடை களையும் மூடமுடிவு செய்யப் பட்டுள்ளது. ஓவ்வொரு மாவட்டத்திலும்  5 முதல் 75 கடைகளை மூட ஆலோசிக்கப்பட்டு உள்ளது.  டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை குறைக்கவும் ஆலோசனை நடந்து வருகிறது.

சென்னை, கோவை, சேலம், மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் மதுக்கடைகள் மூடப்படும் என்றும் இதற்கான அறி விப்பை முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆகஸ்ட் 15 சுதந்திர தின உரை அல்லது இம்மாத இறுதியில் கூடும் சட்டசபையில் வெளியிடுவார் என்று தெரிகிறது

ad

ad