புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஆக., 2015

சென்னையில் ஒரு வீட்டை 22 பேருக்கு விற்ற என்ஜினீயர் கைது



சென்னையில் பெருங்குடி, வீரபாண்டிய கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் புகார் மனு அளித்தார்.  அதில், ‘‘திருச்சியைச் சேர்ந்த பிரபு தனக்கு சொந்தமான பெருங்குடியில் உள்ள வீட்டை விற்பதாக என்னிடம் ஒப்பந்தம் செய்து பணத்தை வாங்கினார். ஆனால் வீட்டை கிரையம் செய்து கொடுக்க மறுக்கிறார். இதே போல் பலரிடம் பணம் பெற்றுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறி இருந்தார்.

இது குறித்து கமிஷனரின் உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த பிரபுவை கைது செய்தனர்.  விசாரணையில் அவர் கம்ப்யூட்டர் என்ஜினீயர் என்பதும், ஒரே வீட்டை 22 பேருக்கு விற்பதாக ஒப்பந்தம் செய்து ரூ.1 கோடி வரை மோசடியில் ஈடுபட்டதும் தெரிந்தது.

தனியார் செல்போன் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்த பிரபு, பின்னர் அதில் இருந்து விலகி தனியாக ஆன்லைன் வர்த்தகம் செய்துள்ளார்.

இதற்கு பணம் அதிகம் தேவைப்பட்டதால் வீட்டை விற்பதாக கூறி பலரிடம் பணம் பறித்துள்ளார். இதே போல ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறி 10–க்கும் மேற்பட்டோரிடம் ரூ.3 கோடி வரை மோசடியில் ஈடுபட்டு இருப்பதும் தெரிந்தது.  கைதான பிரபுவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ad

ad