புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஆக., 2015

கோயம்பேடு உள்பட 352 பஸ் நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறை ஜெயலலிதா திறந்து வைத்தார்

















தமிழக அரசு வெளியிட் டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பேருந்து நிலையங்களில் காத்திருக்கும் வேளைகளில் அன்னையர் தங்கள் குழந்தைகளுக்கு எவ்வித இடையூறுமின்றி தனிமையில் வசதியாக பாலூட்டும் வகையில் அரசு பேருந்து முனையங்கள், நகராட்சி மற்றும் நகர பேருந்து நிலையங்கள் மற்றும் பேருந்து பணிமனைகளுடன் கூடிய பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறைகள் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா 3.7.2015 அன்று அறிவித்திருந்தார்.

அதன்படி, சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து முனையத்தில் குடிநீர் வசதி, இருக்கை வசதி, கைகழுவும் வசதி உள்ளிட்ட வசதிகளுடன் அமைக் கப்பட்டுள்ள பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.
அப்போது, முதல்- அமைச்சர் ஜெயலலிதா, பாலூட்டும் தாய்மார்களுக் கான தனி அறைகளில் தாய்மார்கள் தங்கள் உடைமைகளை வைத்துக் கொள்ள சிறிய மேஜை மற்றும் பெஞ்ச் வைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத் தினார்.

பணி மற்றும் பயண நிமித்தமாக வெளியே செல்லும் பாலூட்டும் தாய்மார்களுக்கு மாநிலம் முழுவதும் 351 பேருந்து நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்கென அமைக்கப்பட்டுள்ள தனி அறைகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

குழந்தை பிறந்த உடன் சில தாய்மார்களுக்கு முற்றிலுமோ அல்லது போதுமான அளவுக்கோ தாய்ப்பால் கிடைப்பதில்லை.  எடை குறைந்த குழந்தைகளையும், குறைமாதக் குழந்தைகளையும் காப்பாற்ற தாய்ப்பால் மிக அவசியம்.  நோய்வாய்ப்பட்ட குழந்தை, தீவிர சிகிச்சையில் உள்ள தாயின் குழந்தை, தாய்ப்பால் சுரப்பு குறைந்த அல்லது இல்லாத தாயின் குழந்தை, தத்து எடுக்கப்பட்ட குழந்தை, குடும்பத்தினரால் கைவிடப்பட்ட குழந்தை, மகப்பேறு மரணம் அடைந்த தாயின் குழந்தை ஆகிய குழந்தைகளுக்கும் தாய்ப்பால் மிகவும் அவசியம்.

எனவே, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆணையின் பேரில் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி 2014ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.
இதுபோன்ற தாய்ப்பால் வங்கிகளை மற்ற அரசு மருத்துவமனைகளிலும் தொடங்கிட முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டதன் அடிப்படையில், திருச்சிராப் பள்ளி மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனை, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தஞ்சாவூர் இராஜா மிராசுதார் அரசு மருத்துவமனை மற்றும் எழும்பூர் அரசு மகப்பேறு, நோயியல் நிலையம் மற்றும் மருத்துவமனை ஆகிய அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள ஏழு தாய்ப்பால் வங்கிகளை  முதல்-அமைச்சர் ஜெய லலிதா  இன்று திறந்து வைத்தார்.

ஒவ்வொரு தாய்ப்பால் வங்கிக்கும் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பாலை சேமித்து வைத்து பயன்படுத்த தேவையான உறைநிலை குளிர்பதனக் கருவி, கிருமி நீக்கும் கருவி, தாய்ப்பால் எடுக்கும் கருவி, குளிர்சாதனப் பெட்டி போன்ற அனைத்து நவீனக் கருவிகளும் வழங்கப் பட்டுள்ளன.

தாய்மார்கள் தாங்களாகவே முன்வந்து தானமாக  கொடுக்கும் தாய்ப் பாலை பதப்படுத்தி மூன்று மாதங்கள் வரை தாய்ப்பால் வங்கிகளில் சேமித்து, தாய்ப்பால் கிடைக் காத குழந்தைகளுக்கு வழங்க முடியும்.  இதன் மூலம் பச்சிளங் குழந்தைகளின் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட்டு, குழந்தை களின் சிசு இறப்பினை தவிர்க்க முடியும்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள்  வைத்திலிங்கம்,  விஜயபாஸ் கர், தலைமைச் செயலாளர்  ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன்  மற்றும் அதிகாரிகள் கலந்து கொண் டனர்.

ad

ad