புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஆக., 2015

யாழ். நீதிமன்றம் தாக்குதல் : 4 பேர் பிணையில் விடுதலை ஏனையோருக்கு விளக்கமறியல் நீடிப்பு


யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 27 பேரில் 4 பேருக்கு பிணை வழங்கியதுடன், ஏனையோரை
எதிர்வரும் செப்டெம்பர் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி பொ.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாகக் கைதாகி தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 29 சந்தேகநபர்கள் இன்று யாழ். நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அதில் 4 பேர் 5லட்சம் ரூபா பெறுமதியான 5 ஆட்பிணையில் செல்ல நீதிபதி அனுமதியளித்ததுடன் ஏனையோர் செப்ரெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலைக்கு நீதி கோரி மே மாதம் 20ம் திகதி யாழ். நீதிமன்றத்தின் முன்னால் இடம்பெற்ற ஆர்பாட்டத்தின்போது, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பாக 160 பேர் வரையில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad