புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஆக., 2015

அதிகூடிய வாக்காளர்கள் கொண்ட தொகுதி நுவரெலியா குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதி ஊர்காவற்றுறை இன்னும் 5 மணித்தியாலங்களில் இலங்கையின் பொதுத்தேர்தல்.

 
இலங்கையில் பொதுத்தேர்தல் வாக்களிப்புக்களுக்காக இன்னும் 5மணித்தியாலங்கள் எஞ்சியுள்ளன.
இந்த தேர்தல் நாளை திங்கட்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பித்து மாலை 4 மணிவரை நடைபெறவுள்ளது.
இந்தத்தேர்தலில் 196 நாடாளுமன்ற நேரடி ஆசனத்துக்காக 6151பேர் போட்டியிடுகின்றனர். இவர்களை தெரிவு செய்வதற்காக 15,044,490 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
இந்ததேர்தல் வாக்களிப்புக்கள் 22 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 12,314 வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெறவுள்ளன.
தேர்தலில் 21 அரசியல் கட்சிகளும் 201 சுயேட்சைக்குழுக்களும் போட்டியிடுகின்றன. 
அரசியல் கட்சிகளின் சார்பில் 3,653 பேரும் சுயாதீனக் குழுக்களின் சார்பில் 2498 பேரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இந்தநிலையில் முதல் அஞ்சல் மூல பெறுபெறு நாளை நள்ளிரவில் எதிர் பார்க்கப்படுகிறது.
வாக்களிப்பு நிலையங்களில் பணியாற்ற 2இலட்சம் அரச பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
25ஆயிரம் உள்ளூர் கண்காணிப்பாளர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.  163 வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களும் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.
70ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடவுள்ளனர்.
2014ஆம் ஆண்டு வாக்காளர் பதிவின்கீழ் இடம்பெறும் இந்த தேர்தலில் 56 தொகுதிகளில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வாக்களர்கள் பதிவு பெற்றுள்ளனர்.
இதில் நுவரெலிய மஸ்கெலிய தொகுதியில் அதிகப்படியான 302,836 வாக்காளர்கள் பதிவு பெற்றுள்ளனர்.
ஹோமாகமையில் 174,909 வாக்காளர்களும் கடுவெலயில் 173,355 வாக்காளர்களும் மட்டக்களப்பு தொகுதியில் 172,499 வாக்காளர்களும் பதிவு பெற்றுள்ளனர்.
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் ஆகக்குறைந்த 22,057 வாக்காளர்கள் உள்ளனர்.

ad

ad