புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஆக., 2015

இந்தோனேசி யபயணிகள் விமானம் 54 பேருடன் மாயம்


இந்தோனே'pயாவில் உள்நாட்டு பயணிகள் விமானம் ஒன்று 54 பேருடன் விமானப்போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலை
யத்துடனான தொடர்பினை இழந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
டிரிகானா ஏர் சேர்விஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விமானம் பப்புவா பிராந்தியத்தில் உள்ள ஒக்ஸிபில் நகருக்குச் சென்றுகொண்டிருந்ததாக போக்குவரத்து துறை அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்ளுர் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் விமானத்தைத் தேடும் பணிகள் நடந்துவருவதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். குறித்த மலைப் பிராந்தியத்தில் நில வும் மோசமான காலநிலை காரணமாக தேடுதல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
விமானத்தில் 44 பயணிகள், 5 குழந்தைகள் மற்றும் 5 ஊழி யர்கள் இருந்ததாக தேசிய மீட்புக்குழு டுவிட்டரில் தெரிவி த்துள்ளது. குறித்த மலைப் பிராந்தியத்தில் நிலவும் மோச மான காலநிலை காரணமாக தேடுதல் பணிகள் பாதிக்க ப்பட்டுள்ளன.
"விமானத்திற்கு என்ன ஆனது என்று எமக்கு இன்னும் உறுதியாகவில்லை. அதுபற்றி உள்@ர் நிர்வாகத்துடன் நாம் தொடர்பில் இருக்கிறோம்" என்று போக்குவரத்து அமை ச்சின் பேச்சாளர் ஜ{லியஸ் பரதா குறிப்பிட்டுள்ளார். "அங்கு காலநிலை மோசமாக உள்ளது. அதிக இருள்மய மாக இருப்பதோடு கறுமேகங்கள் சூழ்ந்துள்ளன. தேடுத லுக்கு உகந்த சூழல் இல்லை. அது மலைப்பிரதேச மாகவும் காணப்படுகிறது" என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த டிசம்பர் மாதம் ஏர் ஏசியா பயணிகள் விமானம் 162 பயணிகளுடன் இந்தோனேசியாவின் சுரபயாவில் இரு ந்து சிங்கப்பு+ர் சென்றபோது விபத்துக்குள்ளாகி அனைவ ரும் இறந்தனர். இதையடுத்து, விமான பாதுகாப்பை அதி கரிக்கும் வகையில் விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்ட நிலை யில் தற்போது விமானம் காணாமல் போயிருப்பது குறிப்பி டத்தக்கது.

ad

ad