புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஆக., 2015

புலம்பெயர் தமிழரின் அனாகரிகமான செயலால் யாழில் 6ஆவது ஆசனத்தை இழக்கிறது கூட்டமைப்பு!

புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் ஆதரவுடன் தேர்தலில் போட்டியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்
தேசிய மக்கள் முன்னணி என்ற அரசியல் கட்சி யாழ்மாவட்டத் தேர்தல் தொகுதியில் 5 வீதமான வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில் அக்கட்சியை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆசனக் கணிப்பீட்டில் இணைத்துக்கொண்டதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குக் கிடைக்க வேண்டிய ஆறாவது ஆசனம் இழக்கப்பட்டுள்ளதுடன், அந்த ஆசனம் ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைத்துள்ளது.
நடந்துமுடிந்த பொதுத் தேர்தலில் வட,கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளது. ஆனால் இத்தேதலில் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் ஆதரவுடன் சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலுக்கமைய களமிறக்கப்பட்ட அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் என்கின்ற தமிழ்த் தேசியக் மக்கள் முன்னணி 13,750 இற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று 5 வீதத்தைச் சுவீகரித்துள்ளது. இதனால் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆசனக் கணிப்பீட்டில் இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி, ஐக்கிய தேசியக் கட்சி, பொதுஜன ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகளுடன் த.தே.ம.மு.வும் இணைத்துக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 5வீதமான வாக்குகளுடன் மேலதிகமாக ஆறு வாக்குகளையும் பெற்றுக்கொண்டதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குக் கிடைக்க வேண்டிய ஆசனம் இழக்கப்பட்டுள்ளது. இதனால் சிங்கள அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட விஜயகலா பாராளுமன்ற உறுப்பினருக்கான ஆசனத்தைத் தட்டிச்சென்றுள்ளார்.
புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் அனாகரிகமான செயலால் தாயகத்தில் தமிழ் மக்களின் ஒற்றுமை சிதைக்கப்பட்டு யாழிலிருந்து தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளுக்குக் கிடக்க வேண்டி ஆறாவது பாராளுமன்ற ஆசனம் இழக்கபட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் தாயக மக்கள் அவதானம் செலுத்த வேண்டும்.

ad

ad