புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஆக., 2015

ஆஸ்திரியாவில் வீதியில் கைவிடப்பட்டிருந்த லொறியில் 70 சடலங்கள் பி.பி.சி


ஆஸ்திரியாவில் நெடுஞ்சாலையில் கைவிடப்பட்டிருந்த நிலையில் காணப்பட்ட லொறி ஒன்றிலிருந்து 70 குடியேறிகளின் சடலங்களை மீட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் கூறுகின்றது.
ஆரம்பத்தில் 20 முதல் 50 சடலங்களே காணப்படுவதாக மதிப்பிடப்பட்டிருந்தது.
ஹங்கேரி எல்லைக்கு அருகே, வீதியோரத்தில் கடந்த புதன்கிழமை இந்த லாரி கைவிடப்பட்டுள்ளது.
உள்ளே இருந்தவர்கள் உயிரிழந்து இரண்டு நாட்கள் ஆகியிருக்கலாம் என்று பொலிஸார் நம்புகின்றனர்.
குளிரூட்டல் வசதியுள்ள இடமொன்றுக்கு கொண்டுசெல்லப்பட்ட பின்னரே விசாரணையாளர்கள் தங்களின் பணியை ஆரம்பிக்ககூடிய அளவுக்கு லொறியின் உள்பகுதி மோசமாக இருந்தததாக கூறப்படுகின்றது.
ஹங்கேரியிலிருந்து வந்திருக்கின்ற இந்த லொறியின் ஓட்டுநரை கண்டுபிடிக்கும் முயற்சியில் அந்நாட்டுடன் சேர்ந்து ஆஸ்திரியாவும் ஈடுபட்டுள்ளது.
வாகனத்தின் ஓட்டுநர் மனிதர்களை சட்டவிரோதமாக கடத்திவரும் கும்பலைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

ad

ad