புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஆக., 2015

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை எதிர்த்த வழக்கு: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி



பேரறிவாளன், முருகன், உள்ளிட்ட 7 பேர் விடுதலையை மத்திய அரசு எதிர்த்த வழக்கு இன்று  (செவ்வாய்க்கிழமை) உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது, 7 பேரை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு கருதுகிறதா. அதிகாரம் இல்லை என்று கருதினால் அதை தமிழக அரசுக்கு ஏன் தெரிவிக்கவில்லை. கருத்தை தமிழக அரசுக்கு தெரிவிக்காமல் உச்சநீதிமன்றத்தை அணுகியது ஏன். மாநில அரசுகளின் உத்தரவை தடுக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தெரிவித்தது.

அப்போது, பாதிக்கப்பட்டவர்களை கருத்தில் கொண்டு தமிழக அரசு செயல்படவில்லை. தமது அதிகாரத்தை விட்டுக்கொடுக்க தமிழக அரசு தயாராக இல்லை. தமது அதிகாரத்தை பயன்படுத்துவதிலேயே தமிழக அரசு குறியாக உள்ளது என்று மத்திய அரசு வழக்கறிஞர் ரஞ்சித் குமார் தனது வாதத்தின் போது குற்றம் சாட்டினார். 

ad

ad