புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஆக., 2015

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு மத்திய அரசு மீண்டும் எதிர்ப்பு!


ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ள மத்திய அரசு, தண்டனைக் குறைப்பு பெற்றவர்கள் இரட்டை பலன் பெற முடியாது என்று கூறியுள்ளது.
ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
மேலும், அவர்களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு முடிவு செய்யலாம் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியிருந்தனர்.
பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. இதனை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இவ்வழக்கின் இறுதிக்கட்ட வாதங்கள் முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இரு தரப்பும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதன்படி தமிழக அரசு, தனது எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்தது. அதில், 7 பேரையும் விடுதலை செய்ய அரசு எடுத்த முடிவு சரியானது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மத்திய அரசு இன்று தனது எழுத்துப்பூர்வ வாதத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
அதில், இவ்வழக்கை சி.பி.ஐ.தான் முழுமையாக விசாரித்தது. குற்றவாளிகளை தன்னிச்சையாக மாநில அரசு விடுதலை செய்ய முடியாது. தண்டனைக் குறைப்பு பெற்றவர்களை விடுவித்தால் அவர்கள் இரட்டை பலன் பெறுவார்கள். குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ண ஓட்டத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று தெரிவித்துள்ளது

ad

ad