புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஆக., 2015

இலங்கையுடனான போட்டியில் 8 கேட்ச்களை பிடித்து ரஹானே உலக சாதனை




இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 318 ரன்கள் சேர்த்து ஆடி வருகிறது.

இந்தியா – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த இலங்கை அணி சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 183 ரன்களில் சுருண்டது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 6 விக்கெட்டுகளை சாய்த்து பிரமிப்பூட்டினார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 375 ரன்கள் குவித்து ஆல்–அவுட் ஆனது. இலங்கை தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் தாரிந்து கவ்ஷல் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அடுத்து 192 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை தொடங்கிய இலங்கைக்கு மீண்டும் அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் கருணாரத்னே (0) அஸ்வின் சுழலிலும், கவ்ஷல் சில்வா (0) அமித் மிஸ்ராவின் சுழலிலும் கிளீன் போல்டு ஆனார்கள். ஆட்ட நேர இறுதியில் இலங்கை அணி 4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 5 ரன்களுடன் தவித்தது.

மூன்றாவது நாள் ஆட்டத்தில் இலங்கை அணியின் சங்ககாரா(40), மேத்யூஸ்(39)  திரிமண்ணே (44), முபாராக்(49) ஆகியோர் சீரான இடைவெளியில் வெளியேறினார். ஓரளவு கவுரமான பங்களிப்பை இலங்கை பேட்ஸ்மேன்கள் அளித்ததால், அந்த அணி இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட முன்னிலை பெற்றது. சற்று முன் வரை இலங்கை அணி 72 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 318 ரன்கள் சேர்த்து ஆடிவருகிறது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சண்டிமால் 125 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார். ஹெராத் 1 ரன்னுடன் களத்தில் உள்ளார்.  3 விக்கெட்டுகள் கைவசம் உள்ள நிலையில், இலங்கை அணி இந்திய அணியை விட 126 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இன்னும் இரண்டு நாள் ஆட்டம் எஞ்சியுள்ளதால், இந்த போட்டியில் இந்திய அணியின் கையே ஓங்கியுள்ளது.

இந்த போட்டியில் இந்திய வீரர் ரஹானே 8 கேட்ச்களை பிடித்து உலக சாதனை புரிந்து உள்ளார். விக்கெட் கீப்பர் அல்லாத ஒருவர் 8 கேட்ச்களை பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.

இலங்கை 2 வது இன்ன்ங்சில்  ரஹானேவிடம் இலங்கை வீரர்கள், பிரசாத்,சங்ககாரா,தரிமன்னே,முபாரக்,ஹெராத் ஆகியோர் கேட் கொடுத்து அவுட் ஆனார்கள், முதல் இன்ங்சில் கருணாரத்னே, திரிமன்னே,சந்திமால்,ஆகியோர் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்கள்.

ad

ad