புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஆக., 2015

வீரவன்சவின் சதி வேலைகள் அம்பலம்! முன்னணியில் இருந்து விலகும் சுதந்திர கட்சி


எதிர்வரும் சில நாட்களில் ஸ்ரீலங்கா சுதந்திர கட், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்டர்கள் சிலர் ஜனாதிபதியிடம் முன்வைத்த யோசனைக்கமைய இந்நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரியவந்துள்ளது.
இம்முறை தேர்தலில் முன்னணிக்கு 95 ஆசனங்கள் கிடைத்துள்ள போது அவற்றில் 11 ஆசனங்கள் முன்னணியின் ஏனைய கட்சிகளுக்கு கிடைத்தன.
சுதந்திர கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு முன் நிற்பது இந்த பங்கு கட்சிகள் என குறித்த சிரேஷ்டர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தேசிய சுதந்திர முன்னணி, மக்கள் ஐக்கிய முன்னணி, சமசமாஜ கட்சி, கமியூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் அவற்றுள் உள்ளடக்கப்படும்.
இதேவேளை விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி, சுதந்திர கட்சியில் அதிக குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. சுதந்திர கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி தங்கள் கட்சிக்கு அதிக வாக்களை பெற்று கொண்டுள்ளதாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய இம்முறை தேசிய சுதந்திர முன்னணிக்கு 05 ஆசனங்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து விலகினால் மீதமாக இருப்பது 84 ஆசனங்கள் மாத்திரம் என்பதும் குறிப்பிடத்தக்கது

ad

ad