புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஆக., 2015

இளைஞர்கள் நினைத்தால் நுவரெலியாவில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்: இராதாகிருஷ்ணன்


இளைஞர்கள் நினைத்தால் இந்த நாட்டை மட்டுமல்லாமல் நுவரெலியா மாவட்டத்திலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என இராஜாங்க கல்வி அமைச்சரும் ஜக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 
ஹட்டனில் நேற்றைய தினம்  டீ.கே.டபிள்யூ மண்டபத்தில் இடம்பெற்ற தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்ககையிலேயே அவர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றும் போது,
இளைஞர்களாகிய நீங்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஏற்படுத்திய மாற்றத்தை போல் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
இந்தியாவின் முன்னால் குடியரசு தலைவர் மறைந்த அப்துல் காலாம் கூறியது போல் 2020ஆம் ஆண்டு உலக வல்லரசாக இந்தியா வரப்போகின்றது. அதற்கு இந்த இளைஞர் பட்டாளம் தான் காரணமாக இருப்பார்கள் என்று கூறினார். அந்தவகையில் இந்த இளைஞர்கள் நினைத்தால் இந்த நாட்டை மட்டுமல்லாமல் நுவரெலியா மாவட்டத்திலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் போது அதில் திகாம்பரம், இராதாகிருஷ்ணன், திலகராஜ் ஆகியோர் உள்வாங்கப்பட வேண்டும் அதற்கு இளைஞர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றார்.
மலையகத்தில் ஒரு குடும்பத்திலிருந்து குறைந்தது ஒரு பட்டதாரியேனும் உருவாக வேண்டும். ஒருவரேனும் அரச ஊழியராக பணியாற்ற வேண்டும்.
மலையகத்தில் பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்பது பலரதும் எதிர்ப்பார்ப்பாக காணப்பட்டது. அந்த எதிர்ப்பார்ப்பை நாம் வெகுவிரைவில் பூர்த்தி செய்வோம். மலையகத்தில் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு பத்தனை கொலப்பத்தனை பகுதியில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே விரைவில் மலையக மாணவர்களுக்காக மலையகத்தில் பல்கலைக்கழகம் அமைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ad

ad