புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஆக., 2015

வெள்ளை வான் விவகாரம்! மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா பதவியிலிருந்து தூக்கப்பட்டார்


கொழும்பின் புறநகர் மீரிஹானயில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட வெள்ளை வான் தொடர்பில் சந்தேகிக்கப்பட்ட இலங்கை இராணுவத்தின் கொமாண்டர் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்
இதனையடுத்து அவரின் இடத்துக்கு பிரிகேடியர் ரால்ப் நுகேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் எதிர்வரும் 19ம் திகதியில் இருந்து அமுலுக்கு வரவுள்ளது.
கடந்த ஜூலை 22ம் ஆண்டு சாதாரண உடையில் இருந்து இரண்டு இராணுவ வீரர்கள் போலியான இலக்கத்தகட்டுடன் கூடிய வெள்ளை வான் ஒன்றில் துப்பாக்கியுடன் பயணித்த போது கைதுசெய்யபபட்டனர்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அவர்கள் வைத்திருந்த துப்பாக்கி பிரசன்ன சில்வாவின் உடையது என்றும், வாகனம் விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டது என்றும் தெரியவந்தது.
இதேவேளை பிரசன்ன சில்வா, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் நெருங்கிய அதிகாரி என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ad

ad