புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஆக., 2015

தமிழ்தேசியக்கூட்டமைப்பின் கூட்டத்திலே தேசியப்பட்டியல் உறுப்பினர் குறித்து முடிவெடுக்கப்படும்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் விபரம் மற்றும் அமையவிருக்கும் அரசாங்கத்தில் கூட்டமைப்பின்
நிலைப்பாடு என்பன தொடர்பில் கூட்டமைப்பின் கூட்டத்திலேயே முடிவெடுக்கப்படும் என
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்
எதிர்வரும் சில தினங்களில் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெறும்.
இலங்கை தமிழரசுக் கட்சிக்கு இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்துள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தேசியப் பட்டியலுக்கு நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்கள் யார் என்பது இன்னும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் இவ்விடயம் பற்றி கூட்டமைப்பின் கூட்டத்திலே ஆராய்ந்து தேசியப்பட்டியல் உறுப்பினர் குறித்து முடிவெடுக்கப்படும். அமையவுள்ள அரசாங்கம் தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்தும் இதன்போது தீர்மானிக்கப்படும் என்றார்.
இதேவேளை பொதுத் தேர்தல் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஒரு வாரத்திற்குள் தேசியப் பட்டியல் உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
இதற்கமைய வெற்றியீட்டிய கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க கூறியுள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் இம்முறை 14 பேர் தேர்தல் மூலம் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்

ad

ad