புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஆக., 2015

ஐ.ம.சு.கூட்டமைப்பிலிருந்து ஹிருணிகா உட்பட அறுவர் நீக்கம்


ஊவா மாகாண அமைச்சர் வடிவேல் சுரேஷ், மாகாண சபை உறுப்பினர்களான நிஷாந்த வர்ணசிங்க, நிரோஷா அத்துகோரல மற்றும் ஹிருணிகா பிரேமசந்திர உள்ளிட்ட அறுவரை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்புரிமையிலிருந்து இன்றிலிருந்து நீக்குவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர்களுக்கான உத்தியோகபூர்வ கடிதங்கள் தபாலிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பின் இந்த தீர்மானம் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளருக்கும் அறிவுறுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நிஷாந்த வர்ணசிங்க, நிரோஷா அத்துகோரல மற்றும் ஹிருணிகா ஆகிய மூவரும் சட்டபூர்வமாகவும் தார்மீகமான முறையிலும் மாகாண சபை உறுப்பினர்களாக செயற்பட முடியாது என்றும் இதுதொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் எடுக்கும் முடிவையடுத்து விருப்பு வாக்குகளில் அவர்களுக்கு அடுத்ததாக இருப்பவர்களை தெரிவு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
இதற்கமைய ஊவா மாகாண சபை உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ், ஹரீந்திர தர்மதாஸ்,
மேல் மாகாண சபை உறுப்பினர்களான நிஷாந்த வர்ணசிங்க, ஹிருணிகா பிரேமச்சந்திர, நிரோஷா அத்துகோரல,
தென் மாகாண சபை உறுப்பினர் ஹெவா அந்தனிகே பியசேன, ஆகிய அறுவருமே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளனர்.

ad

ad