புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஆக., 2015

தேசிய அரசாங்கத்தை அமைக்க தொடரும் கலந்துரையாடல்கள்


தேசிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி குழுகள் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் கூடியுள்ளது.
குறித்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இணைந்து கொண்டுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் டப்ல்யூ.டீ.ஜே.செனவிரதன் தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கமாக எதிர்வரும் காலங்களில் செயற்படுவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களை பெற்று கொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் டப்ல்யூ.டீ.ஜே.செனவிரதன்வின் தலைமையில் 08 பேர் கொண்ட குழுவொன்று ஜனாதிபதியியனால் நியமிக்கப்பட்டது.
அத்துடன், சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவில் தேசிய அரசாங்கம் ஒன்றை கட்டியெழுப்புவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தலைமையில் ஆறு பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டது.
நேற்று மாலை 2 மணிக்கு கூடிய இந்தக் குழுக்கள் மீண்டும் நேற்று இரவு கூடி கலந்துரையாடியுள்ளதாக சுதந்திர கட்சி தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ad

ad