புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஆக., 2015

சசிபெருமாள் உடலை உறவினர்கள் வாங்காமல் சென்றதால் பரபரப்பு!

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அரசு அறிவிக்காததை தொடர்ந்து காந்தியவாதி சசிபெருமாள் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சொந்த ஊர் சென்றுவிட்டனர்.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அதிகாரிகள் விழிபிதுங்கி நிற்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், உண்ணாமலைக்கடையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய காந்தியவாதி சசிபெருமாள் திடீரென உயிரிழந்தார். அவரது உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவரது உடலை வாங்குவதற்காக அவரது சகோதரர், மகன் மற்றும் உறவினர்கள் என 8 பேர் இன்று ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது, தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தினர். தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சசிபெருமாள் உறவினர்களுடன் மாவட்ட கலெக்டர் ஜஞ்சன் சிங் சவான் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். 
 
அப்போது, வழிப்பாட்டு தலங்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை ஒரு மாதத்தில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். அப்போது, நீங்கள் சென்ற இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளின் பட்டியலை எடுத்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்த சசிபெருமாள் உறவினர்கள், நீங்கள் சொன்னால் போதாது, தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். அப்படி அரசு அறிவித்தால் மட்டுமே உடலை வாங்கிச் சொல்வோம் என்று கூறினர்.

மேலும், மாவட்ட நிர்வாகம் எவ்வளவு நிதியுதவி வேண்டும், உடலை கொண்டு போகும் செலவை ஏற்கிறோம் என்று கூறி கொச்சைப்படுத்துகிறார்கள். எங்களுக்கு அரசு சலுகை வேண்டாம், எங்களது கோரிக்கையை மட்டும் நிறைவேற்றினால் போதும் என்றும் அவர்கள் கூறினர்.

கலெக்டர் எவ்வளவோ பேச்சுவார்த்தை நடத்தியும் கொள்கையில் சசிபெருமாள் உறவினர்கள் உறுதியாக இருந்தனர். இதையடுத்து, அவர்கள் சொந்த ஊரான சேலத்திற்கு புறப்பட்டு சென்றனர். 

சசிபெருமாள் உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையை சுற்றி அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதால் அந்த இடமே பரபரப்புடன் காணப்படுகிறது.

ad

ad