புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஆக., 2015

வவுனியாவில் லைக்கா கிராமத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா! சந்திரிக்கா, சம்பந்தன் பங்கேற்பு


லைக்கா நிறுவனத்தினால் அமைக்கப்படவுள்ள லைக்கா கிராமத்திற்கான நினைவுத் தூபி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவினால் இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் லைக்கா கிராமத்தில் அமைக்கப்படவுள்ள புதிய வீடுகளுக்கான அடிக்கல் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துமிந்த திஸ்ஸநாயக்க, லைக்கா தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா, ஞானம் அறக்கட்டளையின் இணைத் தலைவர் ஞானம்பிகை அல்லிராஜா ஆகியோரால் நாட்டப்பட்டது.
குறித்த நிகழ்வில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 25 வருட காலங்களாக உள்நாட்டில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வரும், பூந்தோட்ட அகதி முகாம் மக்களின் வீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் லைக்காவின் ஞானம் அறக்கட்டளை நடவடிக்கை எடுத்துள்ளது. 
அந்த வகையில் பூந்தோட்ட அகதி முகாமில் வசித்துவரும் 150 குடும்பங்களுக்கான நிரந்தர வீட்டுத்தேவையை நிறைவேற்றிக் கொடுக்கும் வகையில் வவுனியா வடக்கு சின்ன அடம்பன் இராசபுரம் பகுதியில் அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட காணியில் லைக்கா குடியிருப்பு அமைக்கப்படவுள்ளது.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 80 பேர்ச் காணி என்று வழங்கப்பட்டுள்ள நிலப்பரப்பில் குறித்த 150 வீடுகள் அமைக்கப்படவுள்ளன.

ad

ad