புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஆக., 2015

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமா? ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கமா? சர்வதேசத்தின் நிலைப்பாடு என்ன?


இலங்கையில் நாளையதினம் நடைபெறும் பொதுத்தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக்கட்சியும் தமக்கே வெற்றி என்று கூறி வருகின்றன. எனினும் எந்தக்கட்சிக்கும் தனித்த பெரும்பான்மை கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கமுடியாதநிலை ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியை பொறுத்த வரையில் கூடியது 105 ஆசனங்களை பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பை பொறுத்தவரை தாம் 110 ஆசனங்களை பெறமுடியும் என்று கூறியுள்ளது
எனினும் ஜனாதிபதியின் கடந்த இரண்டு நாட்களில் நேரடியான அரசியல் நிலை நடவடிக்கைகள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆட்சியை ஏற்படுத்தாது என்றே நம்பப்படுகிறது.
ஜனாதிபதி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசியபட்டியலில் தமக்கேற்றவாறு உறுப்பினர்களை பெயரிடும் வகையில் தமது கட்சித் தலைமை அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளார்.
இந்தநிலையில் வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசனங்கள், தெற்கில் மக்கள் விடுதலை முன்னணியின் ஆசனங்கள், சரத் பொன்சேகாவின் ஆசனங்கள் என்பவற்றை கருத்திற் கொண்டும், ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பில் உள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தரப்பினரின் ஆதரவையும் கொண்டு பெரும்பாலும் தேசிய அரசாங்கம் ஒன்றே அமைக்கப்படும் வாய்ப்புக்கள் தெளிவாகியுள்ளன.
இது இலங்கையின் ஜனாதிபதி விரும்புகிறாரோ இல்லையோ சர்வதேசம் விரும்பும் ஒரு நகர்வு என்பது தெளிவு. இதில் இந்தியாவும் அமெரிக்காவும் முக்கியமான தீர்மானிக்கும் சக்திகள் என்பதில் ஐயமில்லை.

ad

ad