புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஆக., 2015

தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கான கேள்வித் தொகுப்பு


யாழ்.முகாமையாளர் மன்றத்தினால் நடைபெறவுள்ள பொதுத்  தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சிகளுக்கான பொதுத் தேர்தல் கேள்வித் தொகுப்பு யாழ்.சங்கிலியன் பூங்காவிற்கு முன்னால் உள்ள ஈரோவில் மண்டபத்தில் நடைபெற்றது.
 
குறித்த கேள்வித் தொகுப்பு 5 வினாக்களை மையப்படுத்தி தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சிகளில் இருந்து வருகை தந்த ஒவ்வொரு வேட்பாளர்களும் வினாக்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த கேள்வித் தொகுப்பு இடம்பெற்றது.
 
இந்த கேள்வித் தொகுப்பில் 5 கட்சிகளும்,1 சுயேச்சைக் குழு வருகை தந்திருந்தனர். குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எம்.ஏ.சுமந்திரன், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் டக்ளஸ் தேவானந்தா,அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சார்பில் மணிவண்ணன்,தமிழர் விடுதலை கூட்டணி விக்னராசா, மக்கள் விடுதலை முன்னணி சந்திரசேகர் மற்றும் சுயேச்சைக்குழு4 சார்பில் நடேசபிள்ளை வித்தியாதரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
 
மேலும் குறித்த 5 கேள்வித் தொகுப்பின் வினாக்கள்
 
1) தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
2) போர் கால நடவடிக்கைகள்  ( சர்வதேச, உள்ளக போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள்)
3) போரின் விழைவால் ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் நடவடிக்கைகள்
4) வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் நடவடிக்கைகள்
5) குடிநீர், கழிவுநீர் அகற்றல் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
 
போன்ற 5 கேள்விகளை மையப்படுத்தி கட்சிகளில் இருந்து வருகை தந்த வேட்பாளர்கள் தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.
 
 
 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=350724176201666045#sthash.xkIvPq0X.dpuf

ad

ad