புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஆக., 2015

வைகோ போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு, கண்ணீர்புகை குண்டு வீச்சு, தடியடி: கலிங்கப்பட்டியில் பதட்டம்



கலிங்கப்பட்டியில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில், பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி,  டாஸ்மாக் கடையை மக்கள் முற்றுகையிட்டனர். போராட்டத்தில் வைகோவின் 99 வயது தாயார்  பங்கேற்றார்.  அப்போது சிலர், போராட்டக்காரர்கள் மீது கல்வீசினர்.  இதை கண்டுகொள்ளாத காவல்துறைமீது போராட்டக்காரர்கள் ஆத்திரமடைந்து, டாஸ்மாக் கடையை சூறையாடினர். மதுபானங்களை சாலையில் போட்டு உடைத்தனர். 

 இதனால் போராட்டக்காரர்கள் போலீஸ் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.  இது கலவராமாக மாறியது. இதையடுத்து போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் தொடர்ந்து சுட்டனர்.  கூட்டத்தை விரட்டியடிக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் வீசினர்.

இதையடுத்து வைகோ சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். போலீசார் தன்னை நோக்கி திட்டமிட்டே கண்ணீர் புகை குண்டு வீசினர் என்று குற்றம் சாட்டினார்.  அங்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் சாலைமறியல் போராட்டத்தில் பங்கேற்றார்.

வானத்தை நோக்கி சுடும் அளவிற்கு என்ன நடந்தது என்று ஆவேசப்பட்டார் திருமாவளவன்.  அமைதியாக நடந்த போராட்டத்தை கலவரமாக்கியது போலீஸ்தான் என்று வைகோ ஆவேசப்பட்டார்.

ad

ad