புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஆக., 2015

ஒப்பந்தமொன்றின் அடிப்படையிலேயே தேசியப் பட்டியல் ஊடாக தெரிவு செய்யப்பட்டேன்!- ஹிஸ்புல்லாஹ்


ஒப்பந்தமொன்றின் அடிப்படையிலேயே தேசியப் பட்டியல் ஊடாக தெரிவு செய்யப்பட்டேன் என எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
போதியளவு விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொள்ளாத போதிலும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவுடன் செய்து கொண்ட ஒப்பந்த அடிப்படையில் எனது பெயர் தேசியப் பட்டியல் ஊடாக பரிந்துரை செய்யப்பட்டது.
யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களில் அதி கூடிய விருப்பு வாக்கு பெற்றுக் கொள்ளும் வேட்பாளரை தேசியப் பட்டியல் ஊடாக தெரிவு செய்வது என ஒப்பந்ததத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நான் தேசியப் பட்டியல் ஊடாக தெரிவு செய்யப்பட்டமைக்கு எதிராக காத்தான்குடியில் மக்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
இந்தப் போராட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேவைக்கு அமையவே மேற்கொள்ளப்படுகின்றது.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மட்டக்களப்பில் ஓரம் கட்டுவதே முஸ்லிம் காங்கிரஸின் நோக்கமாக அமைந்துள்ளது.
எனக்கு எதிராக ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.  எனினும் அவை ஒன்று கூட இதுரையில் நிரூபிக்கப்படாத போலியானவை.
காத்தான்குடியில் இடம்பெற்ற சம்பவங்களுடன் எனக்கு எவ்வித தொடர்பும் கிடையாது என ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பேர்ல் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற செய்தியாளா சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad