புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஆக., 2015

சுவிட்சர்லாந்தில் ஜேர்மனிய வயோதிப மாது மாடுகளினால் மிதிபட்டு மரணம்

சுவிட்சர்லாந்தில் பசுக்கள் கூட்டத்திற்குள் எதிர்பாராதவிதமாக சிக்கிய பெண் ஒருவர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் Graubünden மண்டலத்தில் Laax என்ற புல்வெளி பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியை சுற்றிலும் வேலிகள் அமைத்து பசுக்களை பாதுகாப்பாக மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.
இந்நிலையில், ஜேர்மனியின் பெர்லின் நகரத்தை சேர்ந்த 77 வயதான பெண் ஒருவர் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு கடந்த வெள்ளியன்று சுற்றுலாவிற்கு வந்துள்ளார்.
இந்த லாக்ஸ் பகுதியில் உள்ள மலையில் ஏறுவதற்காக தனது நண்பர்களுடன் வந்துள்ளார். பசுக்கள் மேயும் பகுதி முழுவதும் வேலி அமைக்கப்பட்டு இருப்பதுடன், அதனுள் யாரும் நுழைய வேண்டாம் என எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டிருந்தது.
மலையில் ஏறுவதற்கு குறுக்கு வழியில் விரைவாக செல்ல திட்டமிட்ட அந்த பெண், பசுக்களின் மேய்ச்சல் பகுதிக்குள் எச்சரிக்கையை மீறி நுழைந்துள்ளார்.
பசுக்களும், அவற்றின் கன்றுகளும் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்தன. இந்நிலையில் உள்ளே புகுந்த பெண்ணை பார்த்து பசுக்கள் அனைத்தும் மிரண்டுள்ளன.
பின்னர், பெண்ணை நோக்கி பாய்ந்து வந்த அந்த பசுக்கள் அவரை கீழே தள்ளி உடல் மீது ஏறி சென்றுள்ளது. இந்த கொடூர காட்சியை கண்ட ஊழியர் ஒருவர் ஓடி வந்து அந்த பெண்ணை மீட்டு மருத்துவருக்கு தகவல் அளித்துள்ளார்.
சிறிது நேரத்தில் மருத்துவர் வந்து சோதனை செய்தபோது, அந்த பெண்மணி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக பேசிய அந்த ஊழியர், தங்களுடைய கன்றுகளை தொந்தரவு செய்ய தான் அந்த பெண்மணி வருகிறார் என பசுக்கள் நினைத்து அந்த பெண்ணை தாக்கி இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சுற்றுலாவிற்கு வந்த இடத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ad

ad