புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஆக., 2015

தமிழ் மக்களின் விடிவுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஒவ்வொரு தமிழ் மகனும் வாக்களிக்க வேண்டும்: ஜெயசேகரன


தமிழ் மக்களின் விடிவுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஒவ்வொரு தமிழ் மகனும் வாக்களிக்க வேண்டுமென யாழ் வணிகர் கழகத் தலைவர் ஆர் ஜெயசேகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, நாடு சுதந்திரம் அடைந்ததன் பின்னரான சுமார் 30 வருடங்களாக தமிழர்களாகிய நாங்கள் ஒரு கௌரவம் மிக்கதொரு அரசியல் தீர்வு கோரி அகிம்சை வழியில் பல வகைகளில் சாத்வீக போராட்டங்களை நடாத்தியிருந்தோம் அது சாத்தியப்படவில்லை.
பின்னரான 30 வருடங்கள் இளைஞர்கள் ஆயுதங்களேந்தி தமிழர் உரிமைக்காக போராட்டத்தை தொடர்ந்தனர். ஆனால் 2009 இல் ஆயுத போராட்டமும் மௌனிக்கப்பட்ட நிலையில் கடந்த ஆறு வருடங்களாக தமிழரை வென்றுவிட்டோம் என்ற மமதையில் ஆட்சியாளர்களின் அடக்குமுறை  ஆட்சியில் நாம் பல வகைகளிலும் அடக்கி ஒடுக்கப்பட்டோம். தமிழரின் இனப்பரம்பலை குறைக்கும் நோக்கில் குடியேற்றங்களை ஏற்படுத்தினர். கடல் வளங்கள் முற்றுகையிடப்பட்டன. இராணுவ முற்றுகைக்குள் நாம் வாழ நேரிட்டது.
இந் நிலைமைகளில் தான், ஆட்சியில் இருந்த அரசை தென்னிலங்கைக் கட்சிகளுடன் இணைந்து ஆளுமை மிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் பங்களிப்புடன் அடக்குமுறை ஆட்சியை  08.01.2015 அன்று மாற்றியது.
இந்த ஆட்சி மாற்றத்தின் பின்பே அடக்குமுறைகளில் இருந்து ஓரளவு நாம் விடுபட்டு சற்று மூச்சு விடக் கூடிய நிலைமைகள் ஏற்பட்டன.
இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிக்குமாறு வேண்டுகோள் விடுத்தவர்களின் ஆலோசனையை தமிழ் மக்கள் கேட்டிருந்தால் இவ்வாறான ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்காது.
தொடர்ந்து அடக்குமுறையில் வாழ நேர்ந்திருக்கும். இதன் மூலம் மீள முடியாத மிக மோசமான நிலைமைக்கு தமிழ்மக்கள் தள்ளப்பட்டிருப்பர். இவ்வாறான புத்திசாதுரியமற்ற ஆலோசனையை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எம் மக்கள் புத்திசாதுரியமாக செய்யப்பட்டு அடக்குமுறை ஆட்சியை மாற்றினார்கள்.
மேலும் இந்த வருடம் செப்ரெம்பர் மாதத்தில் ஐ.நா.வின் போர்குற்ற விசாரணை வெளியிடப்படவுள்ளமையை நீங்கள் அறிவீர்கள். அமையப்போகும் புதிய அரசாங்கமானது வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அமைவாக அரசியல் தீர்வொன்றை முன்வைக்க வேண்டிய ஒரு தீர்க்கமான சூழ்நிலை ஏற்படப்போகின்றது.
இதனடிப்படையிலே தான் 2016 இல் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்று கிடைக்கும் என சம்பந்தன் ஐயா அவர்கள் அறிவித்திருந்தார் அகிம்சை போராட்டமும், ஆயுதப்போராட்டமும் முடிவடைந்து அடக்கு முறை ஆட்சிக்கு பின்னர் அரசியல் தீர்வொன்றுக்காக எங்கும்  நாம் அதனை அண்மித்துள்ள இச் சந்தர்ப்பத்தில் சர்வதேசங்களின் உதவியுடன் அதனை வெல்லும் ஒரு சந்தர்ப்பத்தில் நடைபெறப்போகும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின்  அமோக வெற்றியானது காலத்தின் தேவையாகும். 1977ம் ஆண்டு போல இந்தமுறையும் பாராளுமன்ற தேர்தலிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்று சர்வதேச உதவியுடன் கிடைக்கவிருக்கும் அரசியல் தீர்வை விரைவுபடுத்துவதும், ,லகுவாக்குவதும் தமிழ் மக்களாகிய எமது கையிலேயே உள்ளது.
ஆயுத போராட்ட காலத்தில் பல்வேறு குழுக்களாக போராடிய ஆயுத குழுக்கள் யாவும் தலைவர் சம்பந்தன் ஐயா தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பினுடன் இணைந்து ஜனநாயக பாதைக்கு வந்தனர் என்பதையும், விடுதலை புலிகளே இக் கூட்டமைப்பை உருவாக்கினர் என்பதையும் தமிழ்மக்கள் மறந்திருக்கவேமாட்டார்கள். ஆயுதப்போராட்டத்தில் பங்கேற்ற அத்தனை குழுக்களும் ஒரு சிலவற்றைத்  தவிர இக் கூட்டமைப்பில் பங்கேற்றுள்ளன. இந்த நிலையில் ஜனநாயக நீரோட்டத்தில் சம்பந்தன் ஐயா அவர்களின் முதிர்ச்சி பெற்ற தலைமையின் கீழ் அனைவரும் ஒன்றிணைந்து செல்கின்றமையால்; ஒரு அரசியல் தீர்வு மிக விரைவில் கிடைக்கும் என தமிழ் மக்கள் பெரிதும் நம்பியிருக்கின்றார்கள். மற்றும் இலங்கைத்தமிழ் மக்களாலும் ஐ.நா உட்பட அனைத்து உலக நாடுகளாலும் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பே விளங்குகிறது. தற்போதைய கள நிலைமையில் தமிழர் தேசிய கூட்டமைப்பே தமிழ் மக்களின் கவசமாக, நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறது. சம்பந்தன் ஐயா தலைமையிலான காலத்திலேயே தமிழ் மக்களுக்கான சரியான தீர்வு திட்டம் கிடைக்கும் என நாம் நம்புவதோடு; அவருடைய மதிநுட்பம் ஆளுமையில் பெரிதும் நம்பிக்கையும் கொண்டுள்ளோம். ,வ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டிய பாரிய கடமை ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் ,ருக்கின்றது.
தேசிய கட்சிகளையோ சிறு குழுக்களையோ ஆதரிப்பது அல்லது அவர்களுக்கு வாக்களிப்பது என்பது எமக்கான அரசியல் தீர்வுக்கான சாத்தியத்தை பெரிதும் பாதிக்கும் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. எனவேதான் சிறுகுழுக்களை தேர்தலில் நிறுத்தி எமது வாக்குகளை சிதறடிப்பதன் மூலம் தமிழருக்குரிய தீர்வுக்கான சாத்தியப்பாட்டை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கவே  பல தீய சக்திகள் மிகவும் கடுமையாக முயற்சி செய்து வருகின்றன. எனவே தேர்தலை பகிஸ்கரிப்பதோ, வாக்களிக்காது விடுவதோ, அல்லது நடுநிலை வகிப்பதோ  வரலாற்று தவறாகி விடும். ,வ்வாறு செய்வதனால் தீய சக்திகளே வளரும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தவர்களாகிவிடுவோம்.
தமிழ் மண்ணில் வாழ்ந்து போரின் வலியை தாங்கியவர்களுக்கே வலியின் வேதனை தெரியும.; கடந்த காலங்களில் பெரிதும் பாதிக்கப்பட்டு பல ,ன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளோம். அழிவுகளை நேரில் பார்த்தவர்கள் நாம். எனவே எமக்கு தான் அரசியல் தீர்வொன்றின் அருமையும் தெரியும். அந்த வகையில் தற்போதைய கள நிலவரங்களின் படி சாத்தியமான தீர்வுக்காக மட்டுமே நாம் முயற்சிக்க வேண்டும். அதுவே புத்திசாதுரியமானதுமாகும். ,வ்வாறானதொரு சூழல் எம்மை அண்மித்துள்ளது. நாம் பட்ட துன்பங்களில் ,ருந்து விடுதலை பெற வேண்டுமாயின் நாம் தமிழ் தேசிய கூட்டமைப்பையே பலப்படுத்த வேண்டும். அதுவே எமக்கு சிறந்த தீர்வை பெற்றுத்தரும்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பானது அமோக வெற்றி பெற்று வலுவானதொரு அணியாக பாராளுமன்றத்திற்கு செல்லும் போது மட்டுமே எமக்குரிய நல்லதொரு அரசியல் தீர்வு மிக விரைவாக கிடைக்கும். இது மிகவும் அருமையான சந்தர்ப்பமாகும். எனவே தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இதுவாகும்.
அது மட்டுமல்ல செயலாற்ற வேண்டிய தருணமும் கூட. பேரினவாத கட்சிகளினதும்,  உதிரிக்கட்சிகளினதும் பற்பல கோசங்களுக்கும், சலுகைகளுக்கும் ஏமாந்து போகாது அனைத்து தமிழ் மக்களும் வருகின்ற 17ம் திகதி தேர்தலில் தங்கள் வாக்குரிமையை தமிழரின் விடிவுக்காக தமிழரசுக்கட்சியின் வீட்டுச்சின்னத்திற்கு உங்கள் வாக்குகளையிட்டு, நீங்கள் விரும்பும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களை அமோக வெற்றியீட்டச் செய்யுங்கள் என எமது தமிழ் மக்களை அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.
இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களுக்கு ,ருக்கின்ற ஒரேயொரு ஆயுதம் வாக்குச்சீட்டு மட்டுமே. அதனை ஒவ்வொரு தமிழ் மகனும் தவறாது பயன்படுத்த வேண்டுகிறேன் என்று அந்த அறிக்கையில் மேலும் nரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad