புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஆக., 2015

மஹிந்தவை காப்பாற்ற ஏற்படுத்தி கொள்ளப்பட்ட மைத்திரி - கோத்தபாய இணக்கப்பாட்டில் விரிசல்?


கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கும் இடையில் ஏற்படுத்தி கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டில் விரிசல் நிலைமை தோன்றியுள்ளதாக ஜனாதிபதிக்கு நெருங்கிய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது தரப்பு இணக்கப்பாட்டின் அடிப்படையில் செயற்படாமையே இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
இவ் இணக்கப்பாட்டிற்கமைய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் “எதிர்கால சான்றிதழ்” என்ற பெயரில் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு மேலதிகமாக ஜனாதிபதி தரப்பினரினால் தயாரிக்கப்பட்ட 'அரசியல் சீர்திருத்தம்' என்ற தலைப்பிலான பகுதியினை உள்ளடக்க வேண்டும் எனக் கூறப்பட்டது.
எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தரப்பினால் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள், நீக்கப்பட்டுள்ளதோடு, தேர்தல் பிரச்சார மேடைகளில் ஜனாதிபதி மைத்திரியை விமர்சனம் செய்வதில்லை என இணக்கப்பாடு ஏற்படுத்தி கொள்ளப்பட்டிருந்த போதிலும் மஹிந்த ராஜபக்சவினால் மேடைகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பகிரங்கமாக விமர்சிக்கப்பட்டள்ளது.
அத்துடன் "மூத்த அரசாங்க ஆட்சியாளர்' என்ற கௌரவமான பதவியை மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்குமாறும் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாடும் முற்று முழுதாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எப்படியிருப்பினும் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியுடன் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக செயற்பட்ட பசில் ராஜபக்ச அவற்றில் இருந்து முற்றிலுமாக விலகியுள்ளார்.
முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் முதல் முதலாக பசில் ராஜபக்சவின் குழுவினாலே தயாரிக்கப்பட்டன, எனினும் பின்னர் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியுடன் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொண்டமையினால் அதுவரையில் அச்சிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனங்கள் தீவைத்து அழிக்கப்பட்டன.
இதனால் பசில் ராஜபக்சவுக்கும், கோத்தபாய ராஜபக்சவுக்கு மோதல் நிலை ஏற்பட்ட நிலையில் மஹிந்த ராஜபக்ச கோத்தபாய ராஜபக்சவுக்கே ஆதரவு வழங்கியுள்ளார்.
இக் காரணங்களினால் குடும்ப உறுப்பினர்களும் இடையிலும் மோதல் நிலை முற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ad

ad