புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஆக., 2015

வாக்கெண்ணும் நடவடிக்கைகளில் முறைகேடு;வெளியான செய்திகள் அனைத்தும்பொய்:என்.வேதநாயகன்

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்லில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் நடைபெற்ற வாக்கெண்ணும் நடவடிக்கைகளில் முறைகேடுகள் நடைபெற்றிருந்தது
என்று வெளியான செய்திகள் அனைத்தும் பொய் என்று யாழ்.அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் மறுத்துள்ளார்.
வாக்கெண்ணும் நடவடிக்கைகள் சுதந்திரமாகவும், வெளிப்படைத் தன்மையுடனுமே நடைபெற்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்று காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இச் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்.
பாராளுமன்ற தேர்தல் வாக்கெண்ணும் பணிகள் யாழ்.மத்திய கல்லூரியில் நடைபெற்றிருந்த போது சுதந்திரமானதுமாகவும், வெளிப்படைத் தன்மை கொண்டதாகவுமே வாககெண்ணும் பணிகள் நடைபெற்றிருந்தது.
தேர்தல் ஆணையாளருடைய விசே அறிவுறுத்தலின் படி சகல வாக்கென்னும் நிலையங்களையும் வேட்பாளர்கள் சென்று பார்வையிடக் கூடிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
வட்டுக்கோட்டை தொகுதி தேர்தல் முடிவுகள் தாமதமாக வெளியிடப்பட்டதற்கு காரணம் அங்கு வாக்கென்னும் போது சில நிர்வாக தவறுகள் நடைபெற்றிருந்தது. இதனை சரிசெய்யவே அத்தொகுதி முடிவுகள் வெளியிட தாமதம் ஏற்படடிருந்தது.
இதனைத்தவிர வேறு முறைகேடுகள் அங்கு நடைபெறவில்லை விருப்பு வாக்குகளில் மோசடி செய்யப்பட்டது என்பதெல்லாம் பெய். இங்கு சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தல் நடைபெறபோது சுதந்திரமானகவும், வெளிப்படைத்தன்மையும் பேனப்பட்டது என்றார்.

ad

ad