புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஆக., 2015

நலமுடன் உள்ளார் இளையராஜா



 இசை அமைப்பாளர் இளையராஜா ( வயது 73), கடந்த வெள்ளிக் கிழமை தனக்காக, பிரத்யேக இணையதளம் ஒன்றை துவக்கினார். அன்று இரவு, அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனே, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இளையராஜா சேர்க்கப்பட்டார். 

அங்கு அவருக்கு, இதய நோய் பாதிப்பு உள்ளதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து  நேற்று காலை, ஆஞ்சியோ பிளாஸ்ட் என்ற சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின், இளையராஜா உடல் நலம் தேறி வருவதாகவும், சில நாட்களில், வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் கூறினர்

ad

ad