புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஆக., 2015

வடமாகாண சபையில் முதன் முறையாக பிரேரணை தோற்கடிப்பு


வடமாகாண சபையில் முதன்முறையாக சபையில் முன்மொழியப்பட்ட பிரேரணை வழிமொழியப்படாமல் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
மாகாணசபையின் 33 வது அமர்வு இன்றைய தினம் நடைபெற்ற நிலையில், மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இலங்கை தீவில் தமிழ்- சிங்கள இனப்பிரசினைக்கு நிரந்தர அரசியல் தீர்வை காண்பதற்கு உதவியாக சர்வதேச சமூகத்தையும் ஜ.நா சபையினை அழைப்பதெனவும் கோரும் பிரேரணையை சபையில் முன்மொழிந்திருந்தார்.
இந்நிலையில் குறித்த பிரேரணை சிவாஜிலிங்கத்தினால் முன்மொழியப்பட்டதன் பின்னர் சபையில் வழிமொழிவதற்கு ஒருவரும் முன்வராத நிலையில் பிரேரணை காலாவதியாவதாக அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் அறிவித்தார்.
இதனை தொடர்ந்து மேலும் பிரேரணையினை விளக்க தமக்கு மேலும் 5 நிமிடங்கள் கேட்ட நிலையில் 5 நிமிடங்கள் வழங்கப்பட்டது. இதனையடுத்து சிவாஜிலிங்கம் விளக்கத்தை வழங்கினார்.
இதனை தொடர்ந்தும் வழிமொழிய எவரும் முன்வராத நிலையில் பிரேரணை காலாவதியாவதாக அவைத்தலைவரினால் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் 6 மாதங்களுக்கு தீர்மானத்தை மீண்டும் முன்மொழியப்பட முடியாது எனவும் அவை தலைவர் சபையில் அறிவித்துள்ளார்.
இதேவேளை வடமாகாண சபை உருவாக்கப்பட்டு இரண்டரை வருடங்களில் இந்த பிரேரணையே முதலில் தோற்கடிக்கப்பட்ட பிரேரணையாகும்.
 

ad

ad