புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஆக., 2015

ஆப்பிள் ஐபோன்களை வீழ்த்திய சீனாவின் ஜியோமி ஸ்மார்ட்போன்கள்; கனாலிஸ் ஆய்வில் தகவல்


விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்களின் வரிசையில் சர்வதேச அளவில் அதிக ஆதிக்கம் செலுத்தி வருபவை ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள். இந்த ஆண்டில்
இன்னும் 5 மாதங்களே எஞ்சியிருக்கும் நிலையில், 11 புதிய கருவிகளை ஆப்பிள் நிறுவனம் வெளியிடுகிறது. 

இந்நிலையில், சீனாவின் பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஜியோமி அதிக திறன்வாய்ந்த ஸ்மார்ட்போன்களை மிகக்குறைந்த விலையில் வெளியிட்டு வருகிறது. இது முன்னணி ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு கடும் சவாலாக உள்ளது. ஏற்கனவே ஜியோமி நிறுவனம் 24 மணிநேரத்தில் அதிக எண்ணிக்கையில் ஸ்மார்ட்போன்களை விற்று கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. 

உலக அளவில் அதிக ஸ்மார்ட்போன்களை தயாரித்து வரும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது சீனா. கடந்த ஏப்ரல்-ஜூலை மாதங்களில் கிரேட்டர் சீனா, ஹாங்காங், தைவான் உள்ளிட்ட பல பகுதிகளில் ஐபோனின் விற்பனை உச்சத்தை தொட்டுள்ளது. இருப்பினும், சீனாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் 3-வது இடத்திற்கு ஆப்பிள் நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலிடத்தில் ஜியோமியும், 2-வது இடத்தில் ஹூவேய் நிறுவனமும் உள்ளது. 

இந்த தகவலை பிரபல ஆய்வு நிறுவனமான கனாலிஸ் வெளியிட்டுள்ளது

ad

ad