புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஆக., 2015

கிழக்கில் ஹக்கீம் பாரிய பின்னடைவு

றிஷாட்டுக்கு மருந்து கட்டுவேன் வைத்தியம் பார்ப்பேன் என்றும் மட்டக்களப்பில் ஐ.தே.க.ஒரு ஆசனமும் பெறாது என்றும் மட்டக்களப்பில் அமீர் அலி மற்றும் ஹிஸ்புல்லா தோற்க வேண்டும் மன்னாரில் றிஷாட் தோற்க வேண்டும் என்றும் அக்கரைப்பற்றில் அதாவுல்லா தோற்க வேண்டும் என்றும் மு.கா.தலைவர் ஹக்கீம் பாரிய தேர்தல் பரப்புரை செய்து வருகின்றார்.
ஒரு சமூகத்தின் தலைவர் என்பவர் அந்த சமூகம்  சார்ந்த நற்செயல்களில் ஈடுபடவேண்டும்.தனது இரண்டு கண்களும் போனாலும் பரவாயில்லை எதிரியின் ஒரு கண்ணாவது பறிபோக வேண்டும் என்ற இலக்கில்தான் ஹக்கீம் தேர்தல்  பரப்புரை செய்து வருகின்றார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருநாளாவது பிள்ளையானையோ அல்லது கருணாவையோ தூற்றியதுண்டா? அல்லது  தாக்கியதுண்டா? இந்த நாகரீகம் ஏன் இன்னும் ஹக்கீமுக்குத் தெரியவில்லை.கிழக்கு மக்களை உசுப்பேற்றி மந்தைகளாக நினைத்து  அரசியல் வியாபாரம் செய்யும் ஹக்கீமை கிழக்கு மக்கள் இன்னும் உணரவில்லையா?
ஹக்கீம் நாகரீகமான தேர்தல் பரப்புரை செய்யவில்லை றிஷாட் பதியுதீனை நேரடியாக தாக்கி துவம்சம் செய்துதான் பரப்புரை செய்கின்றார். அதாவது ஹக்கீக்கு மக்களிடம் பேசுவற்கு எந்தவொரு கருப் பொருளும் இல்லை.மக்களிடம் பேசுவற்கு எந்தவொரு  விடயமும் இன்றி றிஷாட்டுக்கு மருந்து கட்டுவேன் வைத்தியம் பார்ப்பேன் என்று ஹக்கீம் சிறுபிள்ளைத் தனமாக பேசுவதை ஹக்கீம் கட்சியின் பெருமளவு மக்கள்  ரசிக்கவில்லை.
மற்றும் புதிதாக ஹக்கீம் கட்சிக் காரர்கள் றிஷாட்டுக்கு எதிராக  எடுத்து விட்ட ஒரு புரளி றிஷாட்  ஸியா  காரனாம்.அதாவது  ஈரான் நாட்டு ஸியா காரர்கள் போன்று றிஷாட் செயல்படுபவராம். இப்படியாக மக்களிடத்தில் பேசுவதற்கு எதுவுமே இல்லாது தத்தளிக்கும் ஹக்கீம் பெரும் சரிவுக்குள் சென்று விட்டார்.
மு.கா  கோட்டை என்று சொல்லப்படும் சம்மாந்துறை.   சாய்ந்தமருது. பொத்துவில் இறக்காமம் ஆகிய இடங்களில் றிஷாட் பாரிய முன்னெடுப்புச் செய்து வருகின்றார்..மறுபுறம் மு.கா.கோட்டைகளில் ஐ,தே.க.பாரிய முன்னெடுப்புக்களில் ஈடுபட்டு வருகின்றது.
கடந்த 25 வருட மு.கா வரலாற்றில் அம்பாரை மாவட்ட முஸ்லிம் ஊர்களில்   இம்முறை மு.கா என்று சொல்லப்படும் இடங்களில் ஐ.தே.க.ஊடறுத்து புகுந்து விட்டது.சாதாரணமாக ஒரு ஊரில் இருந்து ஆயிரம் வாக்குகளைப் பிரித்தாலும் மு.கா வுக்கு சரிவில்லையா.?
மு.கா வின் வாக்குச் சரிவு
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை.சம்மாந்துறை.பொத்துவில்  ஆகிய தொகுதிகளில் மு.கா வின் அதிகூடிய வாக்குகள் என்பது 82 ஆயிரம் .இந்த 82 ஆயிரத்தில் இருந்து மயில் சின்னம் குறைந்தது 32 ஆயிரத்தையும் ஐ.தே.க. குறைந்தது 8 ஆயிரத்தையும் பிரிக்குமானால் மு.கா.வுக்கு 42 ஆயிரம் வாக்குகள்தான் உள்ளது.
இது மிகவும் குறைந்த கணக்காக எடுத்துக் கொள்வோம்.ஆக மொத்தமாக மு.கா வுக்கு 45 ஆயிரம் என்றாலும் ஹக்கீமின் 2 எம்பி கனவு அடிபட்டு விடும் காரணம் அம்பாறையில் சிங்கள மக்களின் மனாப்பைத் தெரிவு முறையே  1.2.சிங்களவர்கள் என்றால் மு.கா 1 எம்பிதான் அடையலாம்.
அதுவும் யானைக்கு 3 எம்பி கிடைக்கின்ற  போதுதான். குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றிலையும் யானையும் மோதிக் கொண்டு வெற்றியைத் தீர்மானிக்கவுள்ளது.
அதாவது மஹிந்தருக்கான அம்பாறைச் சிங்கள மக்களின் ஆதரவு குறையவில்லை. அந்த வகையில் மயில் சின்னம் தனக்கான வாக்கு வீதத்தை  அதிகரிக்கின்ற போது மு.கா வின் வாக்குச் சரிவு மிகவும் பாதகத்தைக் உருவாக்கி  விடும்.
இதேவேளை அம்பாறை தயாகமகே அம்பாறை தயாரட்னவுக்கு எதிராக தனது நேரடி தாக்குதலையும் யுத்தத்தையும் ஆரம்பித்துள்ளார். இந்த இருவரின் சக்களத்திச் சண்டையினால் அம்பாறைச் சிங்கள மக்களின் மனாப்பைத் தெரிவு சிதறிவிடும். அதனால் மு.கா.எம்பி அதிகரிக்கும். சிங்கள மக்கள் ஒற்றுமைப்படால் சரியான முறையில் மனாப்பைத் தெரிவு அமைந்தால் மு.கா.எம்பித் தெரிவு பாதிப்படையும்.
இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் ஹக்கீமுக்கு  ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்ற எண்ணம் இம்மாவட்ட மக்களின் மனங்களில் ஒரு நிலைப்பாடு உள்ளதை என்னால் காணமுடிந்தது. மற்றது யாருக்கும் வாக்களிப்பதில்லை  என்ற எண்ணத்திலும்  ஒரு 10 வீதமான முஸ்லிம் மக்கள் உள்ளதையும் என்னால் அவதானிக்க முடிந்தது.
காரணம் இவர்களுக்கு வாக்களித்து எந்த விதமான பிரயோசனமும் இல்லை என்றும் மக்கள் தெரிவிக்கின்றார்கள்.காரணம் மக்கள் ஏமாந்து நொந்து விட்டார்கள்.கிழக்கு மாகாணத்தில் தாங்கள்தான் முஸ்லிம்களின் ஏகபிரதிநிதி என்றும் தங்களை விட்டால் முஸ்லிம்களை ஏமாற்ற மாற்றுக் கட்சி இல்லை என்றும் கிழக்கு மக்களை ஏமாற்றி வந்தார்.
மர்ஹூம் அஷ்ரப்பின் மறைவுக்குப் பின்னர் ஹக்கீம் கடந்த 15 வருடங்களாக கிழக்கு  மக்களை ஏமாற்றி ஊருக்கொரு தேசியப் பட்டியல் எம்பி தருவதாகவும் கட்சிக்குள் இருந்த திறமசாலிகள் புத்திசாலிகள் மற்றும் முன்னேறி வரும் தலைகைளை ஓரங்கட்டி ஒதுக்கி அரசியல் செய்து வந்தார். ஹக்கீம் என்னும் கீரைக் கடைக்கு  எதிர்க்கடையில்லாது  தத்தளித்த கிழக்கு  முஸ்லிம்  மக்களுக்கு றிஷாத்தின் கிழக்கு வருகை நல்ல தீனியாகவும் நல்ல எதிர்க்கடையாகவும் அமைந்து விட்டது.
ஹக்கீம் கடந்த 15 வருடங்களாக அதாவுல்லா ,றிஷாத் பதியுதீன்.ஒட்டமாவடி அமீர் அலி . கிண்ணியா நஜீப் ஆகியோரையே ஆரம்ப காலத்தில் கட்சியை விட்டு ஓரங்கட்டி வந்தார். இவர்களை ஓரங்கட்டுவதன் மூலமாக அவர்களின் அரசியலை அளிக்கலாம் என்றுதான் ஹக்கீம் கணக்குப் போட்டிருந்தார்.
கிண்ணியா நஜீப்பைத் தவிர மற்ற எல்லோரும் தனியான கட்சிகள் மூலம் தங்களது அரசில் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.றிஷாட்டைப் பொறுத்த மட்டில் தனது திறமைகளினால் குட்டி அஷ்ரப் என்று மக்களால் பெயர் பெற்றவர்.
ஆனால் ஹக்கீம் கட்சியின் தளமான அம்பாறையில் ஹக்கீமுக்கு பெரும் சவாலாக இருந்து வந்தவர் அதாவுல்லா. இம்முறை றிஷாத் அம்பறைக்கு வந்த பின்பு அதாவுல்லா என்ற பேச்சு இல்லாமல் போய்விட்டது. இப்போது மிகவும்  குறுகிய காலத்திக்குள் றிஷாத் அம்பாறையில் கால் பதித்து விட்டார்.
அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் மத்தியில் றிஷாத் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்து விட்டார் இதை இனிமேல் ஹக்கீமால் தடுக்க முடியாது. அதாவுல்லாவினால் சாதிக்க செய்ய முடியாததை  றிஷாட் மிகவும் குறுகிய காலத்திற்குள் அம்பறையில் காலூன்றி விட்டார்
முஸ்லிம் ஆளுனரை விரும்பாத ஹக்கீம்
பொத்துவில் மஜீட்.கல்முனை ஜவாட் ஆகியோர்கள் திட்டமிட்டு ஹக்கீமால் கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார்கள். கிழக்கு மாகாண  ஆளுனராக பொத்துவில் மஜீட் நியமிக்கப்படவிருந்த நிலையில் ஹக்கீமின் பாரிய எதிர்ப்பினால் அது தடைப்பட்டுப் போனது. மற்றது ஐ.தே.க.வில் மஜீட்டுக்கு வேட்பாளர் சீட் கொடுக்கக் கூடாது என்ற கண்டிப்பான கோரிக்கையொன்றை ரணிலிடம் ஹக்கீம் வைத்தார். அதன் வெளிப்பாடுதான் மஜீட் மயிலுக்கு மாறினார்.
வடக்கில்  றிஷாட் தோற்க வேண்டுமாம். காத்தான்குடியில் ஹிஸ்புல்லாஹ், ஓட்டமாவடியில் அமீர் அலி தோற்க வேண்டுமாம் அம்பாறையில் றிஷாட் அணி தோற்க வேண்டுமாம்  இதை பகிரங்கமாகவே ஹக்கீம் தேர்தல் பரப்புரையாக செய்து வருகின்றார்.
தனது இரண்டு கண்கள் போனாலும் பரவாயில்லை எதிரியின் ஒரு கண்ணாவது போக வேண்டும் என்ற ஒரு முஸ்லிம் தலைமையயைக் கண்டுள்ளோமா? வடகிழக்கில் தன்னைத் தவிர வேறுயாரும் அரசியலில் இருக்கக் கூடாது என்ற குள்ளப் புத்தியில் நரித் தந்திரத்தில் இன்று எமது முஸ்லிம் எம்பி; ஆசனத்தை குழிதோன்றிப் புதைப்பதற்காக இறக்குமதி செய்யப்பட்ட ஹக்கீம் முஸ்லிம்களை  விற்று அரசியல் பிழைப்பு நடத்துவதற்கு சாவுமணி அடிக்க வேண்டும்.
ஏழை எளிய மூதூர் வாழ் மக்களுக்கு 15 வருடமாக போனஷ் எம்பி தருவதாக ஹக்கீம் ஏமாற்றி வருவது  நியாயமா? இதை ஆண்டவன் பொறுப்பானா? அட்டாளைச்சேன மக்களை ஹக்கீமும் ஹசனலியும் போனஷ் எம்பி தருவதாக ஏமாற்றி வருவது  என்ன நியாயம்  இவைகளை நாம் இன்னும் அனுமதிக்க முடியுமா?
கிழக்கு மக்களுக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பு மஹிந்தாவை நாம் எப்படி தோற்கடித்தோமோ அதே போன்று ஹக்கீமை தோற்கடித்து கண்டிக்கு அனுப்ப வேண்டிய பாரிய பொறுப்பு கிழக்குவாழ் முஸ்லிம்; மக்களின் கைகளில் தங்கியுள்ளது.
ஹக்கீம் கட்சி பாரிய சரிவைச் சந்திக்கின்றதா
கிழக்கில் ஹக்கீம் கட்சி பாரிய சரிவுக்குள் வந்து விட்டது. அம்பாறை மாவட்டத்தில் ஹக்கீம் கட்சி மிகவும் பின்தள்ளப்பட்டு விட்டது. அம்பாறை மாவட்டத்தில் ஹக்கீம் உளறி வருகின்றார். ஹக்கீம் என்ன பேசுகின்றார் என்பதே புரியாமல் தடுமாறி வருகின்றார். இப்போது ஹக்கீம் நேரடியாக றிஷாட்டையும் றிஷாட் கட்சியின் வேட்பாளர்களையும் தாக்கி வருகின்றார்.
சம்மாந்துறை வேட்பாளர் றிஷாட் அணியில் போட்டியிடும் இஸ்மாயில் என்பவர் வெற்றியடைந்தாலும் எம்பியாக முடியாது அப்படி எம்பியானால் எனது காதை அறுப்பேன் என்று ஹக்கீம் பொது மேடையில் பேசியுள்ளதானது வெட்கம் கெட்ட அசிங்கமான பேச்சாகவே மக்களால் பார்க்கப்படுகின்றது.
ஒரு கட்சியின் தலைவர் பேசும் பேச்சாகப் பார்க்கப்படவில்லை. ஹக்கீம் என்பவர் தேர்தல் மேடைகளில் ஒரு கட்சியின் தலைவராக சாணக்கியமாக மக்கள் கவர்ச்சியாக பேசக் கூடியதாக இல்லை என்பதை ஹக்கீம் புடம் போட்டுக் காட்டி விட்டார். காட்டி வருகின்றார்.
இந்த வாய்ப்பை றிஷாட் அம்பாரை வந்த பின்புதான் மக்களால் அதிகளவு அறிய வந்துள்ளது.எந்வொரு எதிர்காலத்  திட்டமும் இல்லாது மக்களை ஏமாற்றி அரசியல் பிளைப்பு அரசியல் வியாபாரம் நடத்தி வரும் ஹக்கீம் .தமிழ் முஸ்லிம் இணைப்பை விரும்பாத ஹக்கீம் தமிழ் மக்கள் உறவுக்குத் தடையாக இருந்து வரும் ஹக்கீம் முஸ்லிம் மக்களிடம் இருந்து அகற்றப்பட வேண்டும்.
நீக்கப்பட வேண்டும் என்று கிழக்கு மக்கள் அதிகளவு விரும்புகின்றார்கள். கிழக்கு முஸ்லிம் மக்கள் ஹக்கீமிடம் இருந்து விடுதலை பெற வேண்டும் என்ற அவா எண்ணம் கிழக்கு மக்களிடம் அதிகளவு இருக்கின்றது.
றிஷாட்டின் பாரிய வெற்றி
றிசாட் மஹிந்தரை விட்டு வெளியேறிய பின்னர் ஐ.தே.க. தலைவர் ரணிலுடன் பேச்சுவார்த்தை செய்திருந்தார். அந்தப் பேச்சுவார்த்தையில் றிஷாட் தனது வேட்பாளர்களை யானைச் சின்னத்தில் களமிறக்குவதாகவே பேச்சுவார்த்தைகள் அமைந்தது. ஆனால் அம்பாறையில் றிஷாட் அணிக்கு யானைச் சின்னத்தில் வேட்பாளராக இடம் கொடுக்கக் கூடாது என்று ஹக்கீம் ரணிலுக்கு  கொடுத்த அழுத்தம் காரணமாகவே றிஷாட் தனது மயில் சின்னத்தை அம்பாறையில் இறக்க வேண்டிய நிலை உருவானது.
இதன் மூலமாக றிஷாட்  தனக்கு உண்மையாகவே ஆதரவு உள்ளதா தொடர்ந்து எதிர்காலத்தில் அம்பாறையில் இருக்கலாமா  வேண்டாமா என்ற ஒரு உருப்படியான தகவலை கருத்தை அறிய ஹக்கீம் றிஷாட்டுக்கு களம் அமைத்துக் கொடுத்து விட்டார்.
ஹக்கீம் யானைச் சின்னத்தில் ஒட்டிக் கொண்டு றிஷாட்டின் மயில் சின்னத்தை அம்பாறைக்கு அறிமுகம் செய்வதற்கான அரிய வாய்ப்பை ஹக்கீம் செய்துள்ளார். இதன் மூலம் மரம் மக்கள் மத்தியில் மறைக்கப்பட்டு மயில் நினைவுக்கும் களத்திலும் வந்து விட்டது. வடக்கில் றிஷாட்டின் மயில் சின்னம் முஸ்லிம் மக்களுக்கு என்னவென்றே தெரியாத நிலையில் அம்பாறையில் மயில் தோகை விரித்து விட்டது.
தற்போதைய பொதுத் தேர்தலில்  றிஷாட் கிழக்கில்  மூன்று மாவட்டங்களிலும் மூன்று எம்பிக்கள் பெறும் நிலையுள்ளது. விரைவில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாணத் தேர்தலில் றிஷாட் அணியினர் குறைந்தது 3 மாகாண சபை உறுப்பினர்களை வென்றெடுத்தால் ஹக்கீம் முற்றாக  ஓரங்கட்டப்பட்டு விடுவார் என்பது மட்டும் தெளிவாகின்றது.18 விடிந்து ஹக்கிமின் சரிவு தெரிந்து விடும்.
எம்.எம்.நிலாம்டீன்
mmnilamuk@gmail.com   

ad

ad